ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

6 hours ago
ARTICLE AD BOX

பங்குச்சந்தை இன்று(ஜன. 23) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
76,414.52 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் சற்று சரிந்து ஏற்றமடைந்த நிலையில், பிற்பகல் 12.25 மணியளவில், சென்செக்ஸ் 277.34 புள்ளிகள் அதிகரித்து 76,682.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.90 புள்ளிகள் உயர்ந்து 23,248.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

இதையும் படிக்க | காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்...! - ஆய்வில் முக்கியத் தகவல்

சென்செக்ஸ் பங்குகளில், ஸொமேட்டோ, அல்ட்ராடெக் சிமென்ட், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, சன் பார்மாட்டிகல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.

அதேநேரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பினால் நேற்று முன்தினம்(ஜன. 21) பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் நேற்றும் இன்றும் ஏற்றத்துடன் காணப்படுகிறது.

Read Entire Article