ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகள்… முழு விவரம் இதோ..!!!

9 hours ago
ARTICLE AD BOX

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் மிக முக்கியமாக கருதப்பட்டது ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்தப் புதிய  வரிவிதிப்பு முறைப்படி வருமானவரி மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் பழைய அல்லது புதிய வருமான வரி முறைகளை தேர்ந்தெடுப்பது வரி செலுத்துவோரின் முடிவாகும்.

இருப்பினும் தற்போது புதிய வரி முறையை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறைகளின் கீழ் வரி செலுத்துவோர் சில அடிப்படை தகவல்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி வரி செலுத்துவோர் தங்களின் வங்கி கணக்கு எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும் சேமிப்பு கணக்குகளில் பெறப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். அதேபோல் பங்குச்சந்தைகளில் உள்ள பங்குகள், கூட்டாண்மை சொத்துக்கள் மற்றும் கடன்கள், வெளிநாட்டு சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்த நிலையில் புதிய வரி விதிப்பு முறை குறைந்த வரி விகிதங்களை வழங்கும் அதே நேரத்தில் பெரும்பாலான நிதி விலக்குகளை அனுமதிக்காது. அதாவது பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய வரி விதிமுறையில் இந்த விலக்கு கிடையாது. வாடகை ரசீது கட்டாயமாக புதிய வரி முறையில் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த ரசீதில் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகைத்தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும். பழைய வரி முறையின் கீழ் பல்வேறு விதமான விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்வி கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புது வரி விதிப்பு முறையின் கீழ் பெரும்பாலான விலக்குகளை அனுமதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read Entire Article