ARTICLE AD BOX
செவ்வாய் பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு இப்படி ஒரு சிக்கலா?.. கவனம்.. கவனம்
செவ்வாய் பெயர்ச்சி: மிதுனம் ராசியில் வக்ர நிலையில் உள்ள செவ்வாய் கடகத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் மிதுன ராசியில் உள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூன் 6 ஆம் தேதி வரை அவர் கடகம் ராசியில் நீட்ச நிலையில் இருக்க போகிறார். சுமார் 63 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்க உள்ளது. நீட்ச நிலை என்பது ஆங்காங்கே சில பிரச்னைகள் நிலவினாலும் சில நல்ல பலன்களும் கிடைக்கும். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது ரிஷப ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்தப் பதிவில் காணலாம்.

ரிஷபம்
செவ்வாய் உங்களுக்கு விரயாதிபதி மட்டுமல்ல அவர் ஏழாம் வீட்டுக்கும் அதிபதி. இது களஸ்திர ஸ்தானத்தை குறிக்கும். சட்ட சிக்கல்கள், வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். செலவுகள் குறையும். நிலம் சார்ந்த முதலீடுகள் சாதகமாக உள்ளன. காவல்துறை மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு ஓய்வு கிடைக்கும்.
விராயாதிபதி நீட்சம்
விவசாயிகள், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்போருக்கு இந்த காலம் நன்றாக இருக்கும். விரயாதிபதி நீட்சமாக இருப்பது மிகவும் நல்ல அமைப்பு. இதனால் வருமானம் திருப்தியாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிம்மதி உண்டாகும்
தந்தை வழியில் ஆதரவு உண்டு. பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி அதன் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட பயணங்கள் இந்த காலத்தில் நிறைவேறும். மனதில் நிம்மதி ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்.
பயணங்களில் தடை
உங்களின் வெளியூர், வெளிநாடு பயணங்களில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் ஏழாம் வீட்டு அதிபதி நீட்சமாவதால் உங்களுடைய வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
குழந்தைகளின் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்களுக்கும் அவ்வபோது ஒவ்வாமையால் உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்கவும். தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும்.
பரிகாரம்
வள்ளி தெய்வாணை இணைந்துள்ள திருத்தணி, பழமுதிர் சோலை முருக பெருமானை வழிபடுவதன் மூலம் உங்கள் பிரச்னைகள் குறைந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
- 8-வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி.. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
- இனி இவங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. சட்டசபையில் அமைச்சர் தந்த சர்ப்ரைஸ்.. அப்படிபோடு
- டிரம்ப் முடிவால்.. இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்? TCS, Infosys முக்கிய முடிவு?
- உச்சத்திற்கு போன அபராதம்.. நாடு முழுக்க வருகிறது புதிய டிராபிக் விதிகள்.. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்
- 1000 கி.மீ வேகத்தில் செல்லும்! ஹைப்பர்லூப் டியூப் வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
- நீயா நானா இனிமேல் வராதா? கைமாறிய விஜய் டிவி.. அந்த சேனலும் "அவங்க" கையில் போயிருச்சு: பிரபலம் பளிச்
- நீயா நானாவுக்கு யாரும் “இப்படி” போய்டாதீங்க! பேசக்கூட முடியாது! வருத்தத்தில் சமையல் யூடியூபர் ஜெனி
- ஷேக் ஹசீனாவை பொதுவெளியில் தூக்கிலிட திட்டம்.. வங்கதேச மாணவர்கள் போட்ட பெரிய சதி - உளவுத்துறை ஷாக்
- ரூ.100 கோடியில் நயன்தாரா வீடு.. 7000 சதுர அடியில் ஹைலைட்டே இதுதான்.. சென்னை போயஸ் கார்டனில் அசத்தல்
- ரூ.1500+ரூ.1000..இனிமே மாதம் ‘இவங்களுக்கும்’ மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன அசத்தலான அறிவிப்பு
- இபிஎஃப்ஓ.. 3 நாட்களில் நடக்கும் அதிசயம்.. நாடு முழுக்க உள்ள தனியார், அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்
- ஆடுகள் அதுபாட்டுக்கு மேயும்.. "ஆடு" என மீனா யாரை சொல்றாரு? நயன்தாரா அப்பவே அப்படி.. பிரபலம் அட்டாக்