ஏப்ரலில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டம்: சென்னையில் மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு கூட்டம்

4 hours ago
ARTICLE AD BOX

Published : 15 Mar 2025 06:07 AM
Last Updated : 15 Mar 2025 06:07 AM

ஏப்ரலில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டம்: சென்னையில் மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு கூட்டம்

<?php // } ?>

சென்னை: தவெக பொதுக்குழு கூட்டம், வரும் 28-ம் தேதி சென்னையில் நடக்கிறது. பூத் கமிட்டி மாநாட்டை ஏப்ரல் மாதம் நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். பின்னர், கடந்த பிப்.26-ம் தேதி கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதனிடையே கட்சியில், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 6 கட்டங்களாக 114 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரச்சினைக்குறிய 6 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கட்சி தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவின்போது விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாநாட்டை அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மார்ச்.28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article