ஏடிஎம் கேஸ்.. சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோருக்கு வரப்பிரசாதம்.. பாரத் கேஸ் அதிரடி

4 days ago
ARTICLE AD BOX

ஏடிஎம் கேஸ்.. சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோருக்கு வரப்பிரசாதம்.. பாரத் கேஸ் அதிரடி

Coimbatore
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

கோவை: கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால் 24 மணி நேரத்தில் சிலிண்டர் கிடைக்கும் வகையில் திட்டங்களை பொதுத்துறைநிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் 'பாரத் கேஸ்' நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர் சிரமத்தை குறைக்கும் வகையில், 24 மணி நேரமும் சமையல் எரிவாயு நிரப்பும் வகையில், 'ஏ.டி.எம்., - கேஸ்' திட்டத்தை 'பாரத் காஸ் இன்ஸ்டா' என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டம் கர்நாடகாவின் பெங்களூருவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டப்படி 24 மணி நேரமும் கேஸ் நிரப்ப முடியும்.

சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்துகொள்ள இன்று பல்வேறு வழிகள் உள்ளன.. , போன் கால் மூலம் முன்பதிவு செய்வது இன்றைக்கு பலராலும் பின்பற்றப்படுகிறது.. எஸ்எம்எஸ், ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ் அப் இப்படி பல வசதிகள் இருக்கின்றன. ஜி பே மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

cylinder Gas coimbatore

இதேபோல் அமேசான் உள்பட பல்வேறு ஆப்கள் வழியாகவும் முன்பதிவு செய்ய முடியும்.இன்றைய சூழலில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் சிலிண்டர் பெற சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்நிலையில் தான் 'பாரத் கியாஸ்' நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர் சிரமத்தை குறைக்கும் வகையில், 24 மணி நேரமும் சமையல் எரிவாயு நிரப்பும் வகையில் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது..

இந்த திட்டப்படி வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம். சென்று பணம் எடுப்பது போல், காலி சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பி . புதிய சமையல் எரிவாயு இணைப்பை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இத்திட்டம், டில்லி, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய பகுதிகளிலும், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தால் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள் பயன்பெற முடியும். ஏனெனில் வெளியூர்களில் வந்து புலம் பெயர்ந்து வசிப்பவர்கள் தான் சிலிண்டர் முன்பதிவுக்கு சிரமப்பட்டனர். அவர்களே அதிகம் பயன்பெறுவார்கள். அந்த வகையில் இந்த திட்டம் கோவை, திருப்பூர் உள்பட வெளியூர் மக்கள் அதிகம் வேலை செய்யும் பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது..

பாரத் கேஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, 'ஏ.டி.எம்., - கியாஸ்' திட்டம், சென்னை, பெங்களூர், புனே, மும்பை, ஹைதராபாத் போன்ற பல்வேறு பெருநகரங்களுக்கு அறிமுகம் செய்தால் பயனுள்ள திட்டமாக இருக்கும். தற்போதைய நிலையில் 5 கிலோ என்கிற சிறிய அளவிலான சிலிண்டர்களில் மட்டும் எரிவாயு நிரப்பப்படுகிறது. இந்நிலையில் 'ஏ.டி.எம்., - கியாஸ்' திட்டம் மூலம் 'ஆன்லைன்' முறையில் பணம் செலுத்தி, சிலிண்டர்களில் எரிவாயு நிரப்புவதும் செய்வதும் எளிதாக்க பட்டிருப்பதால், இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Bharat Gas has introduced an ATM - Gas scheme called 'Bharat Gas Insta' to reduce the inconvenience to its customers and to refill cooking gas 24 hours a day. This scheme has been implemented in Bengaluru, Karnataka. Under this scheme, gas can be refilled 24 hours a day.
Read Entire Article