ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான்… ஆக்ரோஷமாக பேசிய சீமான்.>!

2 hours ago
ARTICLE AD BOX

நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன் என்று மேசை தட்டி ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளையோடு அங்கு பிரச்சாரம் முடிவடைகிறது . நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், “சுட்டு பயிற்சி எடுத்த போது துப்பாக்கி பற்றி பாடம் எடுத்தார்.

ஏகே 74 துப்பாக்கி சின்னதா குச்சி மாதிரி இருக்கும். அரிசி மாதிரி தான் இருக்கும். தோட்டா சுட்டுக் கொண்டே இருக்கும் போது அண்ணன் சொன்னார் ரஷ்யாவில் ராணுவத்தில் ஏகே 44 இருந்தது. அதை வாங்கி காவல் துறைக்கு கொடுத்துவிட்டு இப்ப ராணுவத்துக்கு ஏகே 74 கொடுத்திருக்கிறார்கள் என்றார். ரஷ்யாவிடமும்,  நம்மிடம் மட்டும்தான் ஏகே 74 இருக்கிறது என்றார். நம்மிடம் இருக்கும் இந்த துப்பாக்கி வேறு எங்கும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு ஆமாம் என்றார். அப்படி என்றால் இந்தியாவில் ஏகே 74 துப்பாக்கிகள் சுட்ட ஒரே ஆள் நான் தான் என்றேன். அதற்குஆமாம் அதை அங்கே போய் சொல்லுங்கள் என்றார். ஆமாடா..! ஏகே 74 துப்பாக்கியால் நான் சுட்டேன்” என்று சீமான் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

Read Entire Article