ஏஎல்.விஜய் ஸ்டூடியோவில் இயக்குனர் பாலா செய்த காமெடி...! முதல் நாளே இப்படி பண்ணிட்டாரே!

11 hours ago
ARTICLE AD BOX

தெய்வத்திருமகள், மதராசப்பட்டினம், தலைவா, தலைவி என பல படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர் இயக்குனர் ஏஎல்.விஜய். இவர் நடிகை அமலாபாலை 2014ல் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக 2017ல் விவாகரத்து செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி ஸ்டூடியோஸ்: தற்போது இயக்குனர் ஏஎல்.விஜய் டி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார். இது குறித்து தமிழ்த் திரை உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு சினிமாத்துறையில் உள்ள எல்லாருக்குமே இது கண்டிப்பா பயன்படும். விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார்.

என்னாச்சு பாலாவுக்கு?: சிவகுமார், தம்பி ராமையா உள்பட பலரும் விழாவுக்கு வருகின்றனர். அப்போது இயக்குனர் பாலாவும் வருகிறார். அவர் மெதுவாக குனிந்தபடியும், அங்கும் இங்கும் பார்த்தபடி நமட்டுச்சிரிப்பும் சிரிப்பதுமாக பார்க்கவே ஒருமாதிரியாக இருந்தார். அவரது நடையை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்னாச்சு பாலாவுக்கு என்றே கேட்கத் தோன்றியது.


திறப்புவிழாவின் போது முதல் ஆளாக இயக்குனர் பாலாவைக் கத்திரிக்கோலால் திறக்கச் சொன்னால் அவர் டேப்பிற்குக் கீழாகக் குனிந்து செல்ல முயன்றார். பிறகு அவரைத் தட்டி பின்னால் வரச் சொன்னார்கள். அதன்பிறகு இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பிசி ஸ்ரீராம் அந்த டேப்பைக் கட் பண்ணி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சகல வசதி: டி ஒன் ஸ்டூடியோவில் சவுண்டு, எடிட்டிங், எபெக்ட்ஸ் என சகல வசதிகளும் இங்கு உள்ளன. மொத்தம் 3 மாடிகளைக் கொண்டது. ஒரு படத்தை ஒரே இடத்தில இருந்து எல்லாத்தையும் முடிச்சிட்டுப் போயிடலாமாம். அப்படி சகல வசதிகளையும் செய்துள்ளார் இயக்குனர் ஏஎல்.விஜய்.

ஹைகிளாஸா பாம்பேல எடுத்த மாதிரி ஒரு செட் இருக்கு என்றும் சொல்லப்படுகிறது. சூட்டிங் மட்டும் பண்ணிட்டு வந்தால் போதும். மற்ற எல்லா தொழில்நுட்ப வேலைகளையும் இங்கு அழகாக பண்ணிவிட்டுச் செல்லலாம் என எடிட்டர் மோகன் சொல்கிறார்.

Read Entire Article