ஒன்றையணா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க: இயக்குனர் செல்வராகவன் வாய்ஸ்..

5 hours ago
ARTICLE AD BOX
director selvaraghavan gave advice to fans

‘யார்கிட்டேயும் சொல்லாதீங்க, உங்க வேலையை செய்யுங்க, அமைதியா இருங்க’ என கூறியுள்ளார் செல்வராகவன். இது பற்றிய விவரம் பார்ப்போம்..

பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் மீது சர்ச்சைகள் உண்டு. ஆனால், அவரது அண்ணன் செல்வராகவன் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நடிகை சோனியா அகர்வாலை விவாரத்து செய்த பின்னர், தன் துணை இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து, 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது தன் மனதில் எழும் கருத்துகளை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். அவ்வகையில், தற்போது கூறியுள்ளதாவது,

‘ஒரு விஷயம் பண்ண போறீங்க, உங்க லட்சியத்தை அடைவதற்கான பிரிப்பரேஷனில் இறங்குறீங்க அப்படினா அது ரொம்ப நல்லது. அதை ஏன் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுக்கிட்டு திரியணும்.

ஏய் நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? என நீங்கள் செய்ய வரும் விஷயத்தை உங்களுடைய பிரெண்ட்ஸ் உள்ளிட்ட பலரிடம் அதை சொல்லி சொன்னால் என்ன ஆகும், அந்த காரியம் விளங்காமலே போயிடும்.

நீங்க சொல்லி அவங்க சந்தோசப்படுவாங்கனு நினைக்கிறீங்களா? இந்த உலகத்துல யாரும் எதற்காகவும், மத்தவங்களுக்காக சந்தோஷப்படுறதே இல்லை.

அமைதியா இருங்க, அமைதியா வேலை செய்யுங்க, அமைதியா போங்க, அமைதியா வாங்க. நீங்க வேலை செய்யறது யாருக்குமே தெரியக்கூடாது. உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு கூட தெரியக்கூடாது.

இதேபோல இன்னொரு விஷயம்; எதுக்காகவும் யாருகிட்டயும் போயி உதவி கேட்காதீங்க. நீங்க சின்ன உதவி கேட்கலாம், அவங்களும் பண்ணிடறாங்கன்னு வச்சுக்கோங்க, அதை அவங்க ஆயுசு முழுக்க சொல்லி சொல்லி காட்டுவாங்க.

மத்தவங்க கிட்ட நான் அவனுக்கு இந்த உதவி செஞ்சிருக்கேன் தெரியுமா? என்று ஒன்றையணா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க’ என்று பேசியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலர், ‘எப்படி இவ்வளவு சரியா தீர்க்கதரிசி மாதிரி சொல்றீங்க. அனுபவம், மிகச் சிறப்பு. ஃபாலோ பண்றோம் சார்’ என தெரிவித்துள்ளனர்.

director selvaraghavan gave advice to fansdirector selvaraghavan gave advice to fans

The post ஒன்றையணா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க: இயக்குனர் செல்வராகவன் வாய்ஸ்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article