ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த மனைவி சாய்ரா.. காரணம் என்ன தெரியுமா?

4 days ago
ARTICLE AD BOX

இந்தச் சூழ்நிலையில், அவரது சட்டக்குழுவின் மூலம் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒலி வடிவமைப்பாளர் ரெசல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவி ஷாதி, மற்றும் வழக்கறிஞர் வந்தனா ஷா ஆகியோரின் ஆதரவுக்கு' நன்றி தெரிவித்துள்ளார்.

சாய்ராவின் அறிக்கை

வழக்கறிஞர் வந்தனா ஷா அண்ட் அசோசியேட்ஸ் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களுக்கு முன்பு சாய்ரா ரஹ்மான் மருத்துவ அவசரநிலையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சவாலான நேரத்தில், அவரது முழு கவனமும் விரைவான குணமடைதலில் இருந்ததது.

அப்போது அவரைச் சுற்றியுள்ளவர்கள் அளித்த அக்கறை மற்றும் ஆதரவை அவர் மிகவும் பாராட்டுகிறார். மேலும் அவரது ஏராளமான நல்லெண்ணம் கொண்டவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து அவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.” என்று கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி

பின்னர் சாய்ரா, அவரது முன்னாள் கணவர் ரஹ்மான் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். “சாய்ரா ரஹ்மான், இந்த கடினமான நேரத்தில் அவர்களின் தளராத ஆதரவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது நண்பர்கள், ரெசல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவி ஷாதி, மற்றும் வந்தனா ஷா மற்றும் திரு. ரஹ்மான் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர்களின் அன்பு மற்றும் ஊக்கத்திற்கு அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்றார்.

மேலும், “சாய்ரா இந்தக் காலகட்டத்தில் தனியுரிமையை நாட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அவரை புரிந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறார்.” என்று கூறப்பட்டிருந்தது

ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ராவின் பிரிவு

ரஹ்மான் மற்றும் சாய்ரா 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் தங்களது பிரிவை அறிவித்தனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் வந்தனா வெளியிட்ட அறிக்கையில், “பல ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, சாய்ரா மற்றும் அவரது கணவர் ஏ.ஆர். ரஹ்மான், ஒருவருக்கொருவர் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். அவர்களது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப் பதற்றத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மான் உலகின் சிறந்த மனிதர்

அவர்களது பிரிவு குறித்த ஊகங்கள் தொடர்ந்த பிறகு, சாய்ரா ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், “கடந்த சில மாதங்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். அதனால்தான் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து ஓய்வு எடுக்க விரும்பினேன், ஆனால் யூடியூபர்கள், தமிழ் ஊடகங்கள் அனைவரும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த பல வதந்திகளை பரப்புகின்றனர், அவரைப் பற்றி எதுவும் மோசமாகச் சொல்ல வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு அருமையான மனிதர், உலகின் சிறந்த மனிதர்.” என்று கூறியிருந்தார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article