ARTICLE AD BOX
ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருக்கிறார்?... முதல் ஆளாக வந்த பிரபலம்.. முதல்வர் கொடுத்த நம்பிக்கை!
சென்னை: ஆஸ்கர் நாயகனாக புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறஐவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரம்பிய அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து வெளியான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
ஆஞ்சியோ சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைதொடர்ந்து அவர் ஏ.ஆர்.ரஹ்மான் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதுகுறித்த செய்தி அறிந்த நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி முதல் ஆளாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என பதிவிட்டுள்ளார். இவரை தொடர்ந்து ரசிகர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பிரார்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர். அவருக்கு எதுவும் ஆகாது. நலமாக வருவார் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

முதல்வர் பதிவு: அதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் செம்மொழியான தமிழ் மொழியால் பாடலை இசையமைத்திருந்தார். இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள்: ரோஜா படத்தில் தொடங்கிய மேஜிக்கால் நாங்கள் மெய்மறந்து கிடக்கிறோம். மீண்டும் உங்களது இசையால் பல மேஜிக் மற்றும் மாயஜாலங்களை ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்த வேண்டும். மீண்டு வாருங்கள் எங்கள் ஆஸ்கர் நாயகனே என்றும் ரசிகர்கள் எக்ஸ் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏ.ரஹ்மான் உடல்நிலை குறித்த செய்தியறிந்து மனம் பதறிவிட்டோம் இசைப்புயலே உங்களுக்கு ஒன்றும் ஆகாது விரைந்து வருவீர்கள். உங்களது அந்த சிரிப்பை காண காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். உங்களை கடவுள் காப்பார், உங்கள் இதயம் இசையை போன்று மென்மையானது. உங்களுக்காக நாங இருக்கோம் இசைப்புயலே என்றும் கமாண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். என்ன ஆச்சு என்பதை தெளிவாக சொல்லுங்கள் என்றும் சிலர் கேள்வி கேட்க தொடங்கினர். இருப்பினும் அவர் நலம்பெற வேண்டுகிறோம் என்றும் சிலர் தெரிவித்தனர்.
டிஸ்சார்ஜ்: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஏ.ஆர்.ரஹ்மானை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து ரஹ்மான் டிஸ்சார்o் செய்யப்பட்டுள்ளார். பூரண குணத்துடன் நலமாக இருக்கிறார். அவைர பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரபலங்களும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தக்லைஃப், தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களில் இசையமைத்து வருகிறார். மேலும் வெளிநாடுகளில் இசை கச்சேரியும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.