ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!

18 hours ago
ARTICLE AD BOX


தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். சென்னை வீட்டில் இருந்த ரகுமானுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

வீடு திரும்பினார்

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இன்று நீரிழப்பு (Dehydration) தொடர்பான அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவருக்கு சிகிச்சை அளித்து முடித்தபின்னர், நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. 

நீரிழப்பு காரணமாக மருத்துவமனை சென்றார்

இதன் வாயிலாக ஏ.ஆர் ரகுமானுக்கு நீரிழப்பு காரணமாக படபடப்புத்தன்மை உண்டாகி, அது நெஞ்சு வலி என புரிந்துகொள்ளப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பி இருக்கும் நிலையில், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: மருத்துவமனையில் ஏ.ஆர் ரஹ்மான்; நலம்விசாரித்த முதல்வர் முக ஸ்டாலின்.. உடல்நலம் முன்னேற்றமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இதையும் படிங்க: #Breaking: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி; அப்பலோ மருத்துவமனையில் அனுமதி.!

Read Entire Article