எஸ்.ஏ.20 ஓவர் லீக் இறுதிப்போட்டி; டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் பேட்டிங் தேர்வு

2 hours ago
ARTICLE AD BOX

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் எம்.ஐ. கேப்டவுன் களம் இறங்கும். அதேவேளையில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Read Entire Article