ARTICLE AD BOX
Published : 21 Feb 2025 03:48 PM
Last Updated : 21 Feb 2025 03:48 PM
எல்பிஜி வாடிக்கையாளர்கள் e-KYC சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசி நாளா? - அதிகாரிகள் விளக்கம்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டரை பெறும் வாடிக்கையாளர்களின் விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் சேகரித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் (இ-கேஒய்சி) வாடிக்கையாளர் விவரங்கள் சேகரித்து, சரிபார்க்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர் விவரங்களை சமர்ப்பிக்க வரும் மார்ச் 31-ம் தேதி இறுதி நாள் எனவும், எனவே காலக்கெடு முடிவதற்குள் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை தங்கள் ஏஜென்சிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 2.10 கோடி சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், உண்மையான வாடிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து, போலிகளை களைவதற்காக, வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் கார்டு மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் செல்ல முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஏஜென்சி ஊழியர்கள் அவர்களது வீட்டுக்கே சென்று விவரங்களை சேகரிப்பர்.
இதுவரை, மொத்த வாடிக்கையாளர்களில் தற்போது 65 சதவீதம் பேர் தங்களுடைய விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், இந்த விவரங்களை சமர்ப்பிக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் இதுகுறித்து பரவும் தகவல் தவறானது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட மின் பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
- கால் தட்டும் கங்காருகள் | உயிரினங்களின் மொழி - 7
- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர்!
- ‘மத்திய அமைச்சரின் கடிதம் மீனுக்கு தூண்டில் போடுவது போன்றது’ - அன்பில் மகேஸ் கருத்து