ARTICLE AD BOX
இந்திய சினிமா வரலாற்றில் ஒருமணி நேரத்தில் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனையான படம் என்ற புகழை எம்புரான் பெற்றது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், ஒருமணி நேரத்திலேயே 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்தார்.
The Highest Hourly Pre-Sales Ever in Indian Cinemas on BOOKMYSHOW
96.14K/Hr #Empuraan #L2E
BMS - https://t.co/N8VWfpo2bn
Paytm - https://t.co/Fjlf0z8Vtv
District - https://t.co/y1UCD4nLGV
Ticketnew - https://t.co/wvQGWTXGxa#March27 @mohanlal #MuraliGopy @antonypbvr… pic.twitter.com/LRBg5EVjgt
இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், உலகப் புகழ் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் ஜெரோம் பிளினும் நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாக சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: என் அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: டிராகன் இயக்குநர் கோரிக்கை!