"எமகாதகி" படத்தின் டைட்டில் பாடல் வெளியானது

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

'உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'எமகாதகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுகிறது. 'எமகாதகி' படம் மார்ச் மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் 'எமகாதகி'படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், 'எமகாதகி' படத்தின் டைட்டில் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 'சிலு சிலு சிரிப்பாய்' என் தொடங்கும் டைட்டில் பாடலை தஞ்சை செல்வி பாடியுள்ளார்.

A melody that echoes through the soul of Tamil soil! This second title track from Yamakaathaghi is a tribute to our rich Naatupura Gaana, brought to life by the powerhouse voice of our very own தஞ்சை செல்வி. ❤️✨https://t.co/Iuh0tgxZnd pic.twitter.com/rMesIJFF8O

— Yeshwa Pictures (@YeshwaPictures) March 1, 2025
Read Entire Article