எப்போதும் கோபம், மன வருத்தம் இருக்கா.. அப்போ இந்த வைட்டமின் தான் குறைபாடு!

2 days ago
ARTICLE AD BOX

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த வைட்டமின் அவசியம். அது மட்டுமல்லாமல், வைட்டமின் D குறைபாட்டால் உடலில் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படலாம். வைட்டமின் D நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

எப்போதும் கோபம், மன வருத்தம் இருக்கா.. அப்போ இந்த வைட்டமின் தான் குறைபாடு!

எப்போதும் கோபப்படுவது அல்லது எப்போதும் மன வருத்தத்துடன் இருப்பது வைட்டமின் D குறைபாட்டின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். வைட்டமின் D குறைபாடு மூளையை பாதிக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த வைட்டமின் அவசியம்.

வைட்டமின் D

அது மட்டுமல்லாமல், வைட்டமின் D குறைபாட்டால் உடலில் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படலாம். கீழே அதன் அறிகுறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் முழங்கால், இடுப்பு உட்பட பல்வேறு மூட்டுகளில் வலி தொடங்குகிறது.

வைட்டமின் D குறைபாடு

வைட்டமின் D உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இந்த வகையான வலி ஏற்பட்டால் வைட்டமின் D பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் நோய்களுக்கு எதிர்த்துப் போராடவும் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அடிக்கடி வைரல் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடலில் வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இது குறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

உடலை வலுப்படுத்தும் உணவுகள்

தினமும் பல்வேறு தசைகள், தோள்பட்டை, தொடை, கைகளில் வலி இருந்தால் வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற வலி, அவ்வப்போது மரத்துப்போவதும் வைட்டமின் D குறைபாட்டின் காரணமாக இருக்கலாம்.

உடல் பரிசோதனை

வைட்டமின் D குறைபாட்டால் முடி மற்றும் சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம். எனவே அதிக முடி உதிர்தல், சருமம் வறண்டு போவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைட்டமின் D பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மருத்துவர்

மேலும், வைட்டமின் D குறைபாட்டால் மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை மற்றும் நினைவாற்றல் குறைதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி வைட்டமின் D பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்

வைட்டமின் D நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு வைட்டமின் D உட்கொள்ள வேண்டும்.

சத்தான உணவுகள்

சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பதன் மூலமும், வைட்டமின் D நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும் இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். இவை அனைத்தும் தகவல்களுக்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த உடல்நலப் பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

Read Entire Article