எப்பவும் Mood அவுட் தானா அதிலிருந்து வெளிவர எத்தனையோ வழிகள் இருக்கு..!!

3 days ago
ARTICLE AD BOX

இன்றைய நவீன உலகில் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்கள் மூட் அவுட் என்ற வலையில் சிக்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது அதிலிருந்து வெளிவந்து புத்துணர்ச்சி அடைவதற்கும் மாற்றத்தை அடைவதற்கும் பல புதுமையான தனித்துவமான வழிகள் உள்ளன..

தன்னார்வ பணிகளில் நாம் ஈடுபடலாம் குறிப்பாக பொதுமக்களுக்கு உதவுவது அல்லது பிற உயிரினங்களுக்கு உதவுவது போன்ற விஷயங்களை செய்வது புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கும் மேலும் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கவும் செய்யும் புதிய நண்பர்களுக்கு உதவிகள் செய்வதினால் பல அனுபவங்களை பெற முடியும். தொழில்நுட்ப வளர வளர நாம் அதற்கு அடிமையாகி கொண்டு வருகிறோம். அதிலிருந்து சற்று பிரேக் எடுப்பதற்காகவே டிஜிட்டல் டிடாக்ஸ் முகாம்கள் இருக்கின்றன தொழில்நுட்ப பிடியிலிருந்து விடுபட்ட இயற்கை அழகுடன் மீண்டும் இணையவும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும் நினைவாற்றலை மேம்படுத்த பயிற்சி செய்யவும் இந்த முகாம்கள் அனுமதிக்கப்படுகின்றன..

கலை சம்பந்தமான விஷயங்களில் பங்கேற்கும் போது நம்முள் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் அது ஒரு சிகிச்சை போல் செயல்படும் ஓவியம் மண்டபங்கள் செய்வது அல்லது நடனம் போன்றவை நாம் எதிர்மறை எண்ணத்தை விரட்டி நம்முடைய ஆக்கப்பூர்வமான திறமையை வெளிக்காட்டும். யோகா மற்றும் ஆயுர்வேத மையங்கள் போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இடங்களுக்கு செல்வது ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கும் கேரளா ரிஷிகேஷ் மற்றும் அந்தமான் தீவுகள் போன்ற இடங்களுக்கு நம்மை நாமே குணப்படுத்த ஒரு அமைதியான சூழலை வழங்குகின்றன. இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்பது உங்கள் மன அழுத்தத்தை போக்கி ஒரு மகிழ்ச்சியான பாதைக்கு வலியுறுத்தும் பிடித்த உற்சாகமளிக்கும் இசை கேட்பது அல்லது புதிய நடனத்தை கற்றுக் கொள்வது ஒருவரின் மனநிலையை நேர்மையாக வைத்துக் கொள்ளவும் உதவும்..!!

Read Entire Article