ARTICLE AD BOX

2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக அறியப்பட்டவர் நடிகர் ஷாம். 12பி படத்தின் மூலம் அறிமுகமான ஷாம் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற பல படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு பெண் ரசிகைகள் அதிமாக இருந்தார்கள். அதற்கு காரணம் அவர் ஆரம்பத்தில் செலக்ட் செய்த படங்கள் அப்படி. இளசுகளுக்கு பிடித்த காதல் , கல்லூரி கதைகளில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஒரு அலைபாயுதே மாதவன் ரேஞ்சுக்கு ஷாம் தெரிந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவரால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அடைய முடியவில்லை. தமிழில் கடைசியாக வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரன் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படி மற்ற மொழிகளிலும் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில்தான் நடித்து வருகிறார் ஷாம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத வலி என்ன என்பதை பற்றி கூறியிருக்கிறார் ஷாம்.
அதாவது சினிமாவில் எண்ட்ரி ஆனதும் ஏகப்பட்ட கிசுகிசு வந்ததாம். இது அவருடைய அம்மாவைத்தான் முதலில் பாதித்ததாம். அதன் பிறகு அதுவும் பழகிவிட்டது என்று ஷாம் கூறினார். அதன் பிறகு மறக்க முடியாத விஷயம் என்னவெனில் அவருடைய இரண்டாது அல்லது மூன்றாவது படத்திற்கு அந்தப் படத்தின் இயக்குனருக்கு ஃபர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தயாரிப்பாளரிடம் இருந்து மூன்றரை கோடி வாங்கிக் கொடுத்தாராம் ஷாம்.
அப்போது சுற்றியிருந்தவர்கள் ஷாமை எச்சரித்திருக்கின்றனர். இது வேண்டாம். சரி இருக்காது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஷாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அதோடு படத்தில் பின்னணியில் கல்லூரி சம்பந்தமான காட்சி என்றெல்லாம் அந்த இயக்குனர் கூறித்தான் ஷாம் கால்ஷீட்டை வாங்கியிருக்கிறார். ஆனால் படம் எடுக்கும் போது ஏதோ ஏஜென்சியில் வேலை பார்ப்பது போல படமாக்கினார்களாம்.
அதை பற்றி ஷாம் கேட்ட போது அந்த இயக்குனர் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டாராம். அதுவும் கொடுத்த மூன்றரை கோடியில் ஒன்றரை கோடியை அந்த இயக்குனர் வைத்துக் கொண்டாராம். படத்திற்கு செலவு செய்யவில்லையாம். தயாரிப்பாளருக்கு அது பெரிய நஷ்டம் ஆகிவிட்டதாம். இவரும் சினிமாவிற்கு வந்த புதுசு என்பதால் எதுவும் கேட்க முடியாத சூழ் நிலை. இந்த ஒரு சம்பவம் ஷாமை பெரிய அளவில் பாதித்திருக்கிறது.