சீர்காழி அருகே புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கண்கலங்கி பேசியுள்ளார்.

பெண்கள் மதரஸா திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் பெண்கள் மதரஸா திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், எம்எல்ஏகள், எம்பி, நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்

நடிகை மும்தாஜ் பேச்சு

இவ்விழாவில் திரைப்பட நடிகை மும்தாஜும் கலந்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பொதுமக்கள் முன்பு அவர் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், “என் வாழ்க்கை பற்றியும், என்னைப் பற்றியும், நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னை நிறைய பேர் திட்டி இருப்பீர்கள், நிறைய பேர் துவா ( பிரார்த்தனை) செய்திருப்பீர்கள், சரி தானே” என கேட்டு கண்ணீர் மல்க அழுது கொண்டே, “இன்று உங்கள் முன்னே இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோஷம் கொடுக்கிறது” என்றார்.

Indian Currency: ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, மக்களுக்கு வாரிக் கொடுக்காதது ஏன்? ஆர்பிஐ விதிகள் சொல்வது என்ன?

மதத்தை பற்றி தெரியாத ஆள் நான் இல்லை

தொடர்ந்து பேசிய போது, “இதற்கு முன்பு நான் வெளியே சென்று கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் பெண்கள் என்னை ஒரு மாதிரி, அருவருப்பாக பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தம் அளிக்கும். ஆனால், இப்போது உங்கள் முன் இப்படி நிற்பது சந்தோஷமளிக்கிறது. எனது வாழ்க்கையில் எது சரி, எது தவறு, இருந்தது தவறு செய்ய வேண்டுமென எனது தலையில் இருந்தது. அந்த நேரத்தில் இது போன்ற மதரஸா (பெண்கள் பள்ளி) இல்லை. இருந்தாலும் எனது மதத்தை பற்றி ஏவும் தெரியாத ஆள் நான் இல்லை.

Train Service: ஆஹா போச்சா..! ஒரே அடியாக 18 ரயில் சேவைகளை ரத்து செய்த ரயில்வே..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

ஜீன்ஸ், மினி ஸ்கட் போட்டு ஆடுபவர்கள்

சின்ன வயசு அழககாக இருக்கிறீர்கள் நடிக்கிறீங்க என பலரும் சொல்வார்கள். மேலும் நான் நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு, இங்கு வந்து உங்களை பார்த்த பிறகு நீங்கள் எனக்கு அன்பும் ஆதரவும் தருவது சந்தோஷமளிக்கிறது. நாங்கள் நடனம் ஆடுபவர்கள் ஜீன்ஸ், மினி ஸ்கட் போட்டு ஆடுபவர்கள், நம்மை எல்லோரும் கீழ பார்ப்பார்கள் அது மனதிற்கு மிக வருத்துமாக இருக்கும். அந்த நேரத்தில் யாராவது அன்புடன் சொல்லியிருந்தால் மாற்றம் இருந்திருக்கும். மால் போன்ற இடங்களுக்கு செல்லும்போது என்னுடன் பலரும் புகைப்படங்கள் எடுப்பார்கள், அப்போது பர்தாவுடன் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் என்னை பார்க்கும்போது கோவமாக பார்ப்பார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு தெரியும், எந்த மதத்தில் பிறந்து நான் என்ன செய்கிறேன் என ஆனால் இப்போது இறைவனின் அருளால் எவ்வளவு அன்பை கொடுத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.