என்னால நடிக்க முடியாது... வேற ஹீரோவை வச்சி எடுங்க!.. ஷங்கரிடம் சொன்ன ரஜினி!...

23 hours ago
ARTICLE AD BOX

Rajinikanth: ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. அப்போது யார் டிரெண்டிங்கில் இருந்து ஹிட் கொடுக்கிறார்களோ அவர்களின் இயக்கத்தில் நடிப்பார். இதுவே 80களில் எஸ்.பி.முத்துராமன் போன்ற சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே அதிகம் நடித்திருக்கிறார். இப்போது படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் என்பது பெரிதாக இல்லை. அவர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் திரைப்படங்களும் அதிகம் வருவதில்லை. பெரும்பாலும் இளைஞர்களே அதிகம் தியேட்டருக்கு போகிறார்கள். எனவே, இளைஞர்களை கவரும்படி படம் எடுப்பவர்களே இப்போது வெற்றிப்பட இயக்குனர்களாக மாறுகிறார்கள். சமீபத்தில் வந்த டிராகன் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.


ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி சிவாஜி படத்தில் முதலில் நடித்தார். ஷங்கரின் மேக்கிங் ரஜினிக்கு பிடித்துப்போக எந்திரன் மற்றும் 2.0 போன்ற படங்களிலும் நடித்தார். ஆனால், எந்திரன் கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்டது இல்லை. இந்த கதையில் முதலில் நடிக்கவிருந்தவர் கமல். ரோபோ என்கிற தலைப்பில் கமலுடன் ராணி முகர்ஜி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போட்டோ ஷூட்டெல்லாம் நடந்து போஸ்டர்கள் கூட வெளியானது.

ஆனால், சில காரணங்களால் கமல் நடிக்காமல் போக சில வருடங்கள் கழித்து ரஜினி நடிக்க அது எந்திரனாக மாறியது. இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழித்து இப்படத்தின் 2ம் பாகமாக 2.0 வெளியானது. இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.


இந்நிலையில், சமீபத்தில் ஒருவிழாவில் பேசிய பாலிவுட் நடிகர் அமீர்கான் ‘ரோபோ 2.0 படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ரஜினி சாரே தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் அமீர்கானை வைத்து பண்ணுங்க என ஷங்கரிடம் சொல்லிவிட்டார். ஷங்கர் என்னை தொடர்பு கொண்டு ‘நீங்கதான் நடிக்க வேண்டும்’ என கேட்டார். ஆனால், கண்ணை மூடி யோசித்தால் அந்த வேடத்திற்கு ரஜினி சார்தான் நினைவுக்கு வந்தார். என்னை அதில் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை. எனவே ‘ரஜினி சாரால் மட்டுமே இந்த வேடத்தை பண்ண முடியும். என்னால் முடியாது’ என சொல்லிவிட்டேன். ஒருவேளை ரஜினி சார் நடிக்கலனா வேற யாரையாவது வைத்து கூட பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

ரஜினி ரோலில் நடிக்க மறுத்த அமீர்கான் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்.


Read Entire Article