ARTICLE AD BOX
என்னது கார்த்தி நடிக்க வந்து 18 வருஷம் ஆயிடுச்சா.. 2D Entertainment செய்த தரமான சம்பவம்!
சென்னை: நடிகர் சிவக்குமாரின் மகன் மற்றும் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் நடிகர் கார்த்தி. இவர் உதவி இயக்குநராகவே தன்னுடைய பயணத்தை துவங்கினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக ஆயுத எழுத்து படத்தில் இணைந்திருந்த கார்த்தி, அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தின்மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கார்த்தி, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றுள்ளார். தொடர்ந்து தனது தேர்ந்தெடுத்த கதைகளின்மூலம் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி சிவக்குமாரின் மகன் மற்றும் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆயுத எழுத்து படத்தில் மணிரத்னத்திட்ம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள கார்த்தி, கடந்த 2007ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தில் நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படம் அவருக்கு மிகச்சிறப்பான பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. நடிகை பிரியா மணி, சரவணன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ரசிகர்களிடையே கொடுத்திருந்தது. கார்த்திக்கிற்கும் பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுக் கொடுத்தது
18 ஆண்டுகள் நிறைவு: தொடர்ந்து ஒரேமாதிரியான கதைக்களங்கில் சிக்கிக் கொள்ளாமல் தன்னை மிகச்சிறப்பாக அடையாளப்படுத்தும் கதைக்களங்களில் இணைந்து நடித்தார் கார்த்தி.அந்த வகையில் நான் மகான் அல்ல, மெட்ராஸ், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தமிழின் முன்னணி நடிகரானார். இந்நிலையில் இன்றைய தினம் கார்த்த் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்க,ள வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதையொட்டி சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வாழ்த்து தெரிவித்துள்ளது.
2D என்டர்டெயின்மெண்ட் வாழ்த்து: இதையொட்டி 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் கார்த்தியின் இந்த பயணம் குறித்து அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி வீரன் முதல் மெய்யழகன் வரையில் கார்த்தியின் இந்த அற்புதமான பயணத்தை அந்தந்த படங்களின் காட்சிகள் மூலம் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இதுவரை ரசிகர்களுக்கு கொடுத்துள்ள என்டர்டெயின்மெண்ட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில் இனி வழங்கவுள்ள படங்களுக்கும் 2டி எனடர்டெயின்மெண்ட் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருகிறார் கார்த்தி. அவரது வா வாத்யாரே மற்றும் சர்தார் 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்க தயாராகி வருகின்றன. இதில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியது. இதேபோல பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் 2 படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக கார்த்தி 29 படத்திலும் நடிக்க கார்த்தி கமிட்டாகியுள்ளார், படம் பீரியட் படமாக இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.