என்னது! அதிகமா தூங்கக் கூடாதா?

3 hours ago
ARTICLE AD BOX

நாள்தோறும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு பக்கம், தூங்க நேரம் கிடைக்காமல் தவிப்பவர்கள் மற்றொரு பக்கம்... எல்லாவற்றையும் விட அதிகமாக தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவது ஆபத்தானது என்று அதன் விளைவுகளை ஒரு பெரிய பட்டியலாகவே சொல்கிறார்கள். அதைப் பற்றி இதோ சில குறிப்புகள்:

உடல் பருமன்

குறிப்பிட்ட சிலரை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஒரு டாக்டர் குழு ஆய்வு செய்தது. உடல் பருமனையும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதையும் கண்காணிக்கவே இந்த ஆய்வு. தினமும் இரவில் ஏழு முதல எட்டு மணி நேரம் தூங்கியவர்களை விட 9 முதல் 10 மணி நேரம் தூங்கியவர்கள் அதிகம் குண்டாகி இருந்தனர். இந்த ஆறு ஆண்டுகளில் மற்றவர்களை விட அவர்கள் சராசரியாக 5 கிலோ அதிகரித்து இருந்தனர். உணவை அளவாகக் கொடுத்து  உடற்பயிற்சி செய்யச் சொல்லியும் எடை அதிகரிப்பது குறையவில்லை. தூக்கத்துக்கும் உடல் பருமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற உண்மை இதனால் புரிந்தது. 

மூளை பாதிப்பு

முதிய வயதில் இருக்கும் பெண்களின் உடல் நலக் கோளாறுகள் பற்றி ஒரு ஆய்வு நடந்தது. குறிப்பிட்ட சில பெண்களை தொடர்ச்சியாக ஆறாண்டுகள் ஆய்வு செய்ததில் 'தினமும் 9 மணி நேரத்துக்கு அதிகமாகவோ 5 மணி நேரத்துக்கும் குறைவாகவோ தூங்குகிறவர்களின் மூளை சீக்கிரமே முழுமை அடைந்து தன் செயல் திறனை இழக்கிறது' என்ற உண்மை புரிந்தது. தூக்கத்தின் அளவு மாறினால் மூளைக்கு ஆபத்து! 

இதயத்துக்கு ஆபத்து

அமெரிக்காவில் 3 ஆயிரம் பேரிடம் இதய பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்கு பவர்களுக்கு,  நார்மல் ஆக தூங்குபவர்களை விட இதய அடைப்பு ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது என்பது இந்த ஆய்வின் முடிவு. 

குழந்தைப்பேறு பாதிப்பு:

ழலைச் செல்வம் வாய்க்கப் பெறாமல் செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வந்த  650 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தென்கொரியாவில் நடைபெற்ற இந்த ஆய்வில் 'தினமும் 9 முதல் 11 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது' என தெரிய வந்தது. 

மன அழுத்தம்

ரட்டையர்களாக பிறந்து வளர்ந்தவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 'அதிகம் தூங்குபவர்களுக்கு மன அழுத்த பிரச்சனை வரும் ஆபத்து உள்ளது என்ற உண்மை அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 9 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கியவர்களில் 27% பேருக்கு மன அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்கியவர்களில் 49 சதவீதம் பேர் இந்தப் பிரச்சனைக்கு ஆளானார்கள். 

இதையும் படியுங்கள்:
ஆபிஸ் போனதும் தூக்கம் வருதா? உங்களுக்குத்தான் இந்த 10 ஆலோசனைகள்!
Sleep

சர்க்கரை நோய்

தினமும் எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூங்கி வழிபவர்களுடைய கணையத்தின் செயல் திறன் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் சீக்கிரம் வரும் அபாயம் உள்ளது என்கிறது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவு. உணவுக் கட்டுப்பாடு , உடற்பயிற்சி என எல்லாம் செய்தாலும், சர்க்கரை நோயைத் தூண்டி விடுகிறதாம் அதிகத் தூக்கம். 

16 தனித்தனி ஆராய்ச்சிகள் பல ஆண்டுகள் செய்யப்பட்டன.13 லட்சத்துக்கு 83 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட மெக ஆராய்ச்சி இது. இன்னும் சொல்லப்போனால் இயல்பான அளவு தூங்குபவர்களை விட குறைவான நேரமோ அதிக நேரமோ தூங்குபவர்கள் சீக்கிரமாக ஏதோ ஒரு காரணத்தால் இறக்க நேர்கிறது என்ற உண்மை தெரிய வந்துள்ளது. தினமும் எட்டு மணி நேரத்துக்கு அதிகமாக தூங்குபவர்கள் முதுமைக்கு முன்பே மரணத்தை தழுவும் ஆபத்து மற்றவர்களை விட 1.3 மடங்கு அதிகம் உள்ளது என்று இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது. 

ஆதலால், மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பதை நினைவில் வைத்து அளவாகத் தூங்கி வளமாக வாழ்வோம்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!’ (கிரைம் கதை)
Sleep
Read Entire Article