ARTICLE AD BOX
சர்ச்சைக்கு பதிலடி: சமீபத்தில் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்தது. திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என அடுத்தடுத்து வாழ்த்துக்களை கூறி வந்தனர். இன்னொரு பக்கம் திடீரென ஏன் இந்த பத்மபூஷன் விருது அஜித்திற்கு கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் சர்ச்சைகளும் கிளம்பின. இது விஜய்க்கு எதிராக திருப்பும் செயல்தான் என கூறப்பட்டது. இதற்கு பின்னாடி அரசியல்தான் இருக்கிறது என்றும் கூறி வந்தனர்.
இந்தியாவுக்கு பெருமை: எப்படி இருந்தாலும் இந்த விருதுக்கு அஜித் தகுதியானவர் என சமீபத்திய ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் கூறியிருக்கிறார். அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. திரை துறையில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் அஜித் சிறந்து விளங்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடந்த 24 ஹெச் கார் பந்தயத்தில் அவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.
சொந்த உழைப்பு: இதன் மூலம் உலக மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தகுதியானது. இதுவே ஒரு பெருமை மிகுந்த செயல். இதற்கு பல தரப்பினர் வாழ்த்துக்களை கூறினர். அது மட்டுமல்ல அஜித்தின் பேஷனே கார் ரேஸ், பைக் ரேஸ் என்பதுதான். ஆரம்பத்தில் மெக்கானிக்காக இருந்த அஜித் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்கவும் வந்தார். அதன் பிறகு சினிமாவிலும் ஒவ்வொரு படியாக ஏறி ஒரு மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார்.
மெக்கானிக்கான அஜித்: இன்னொரு பக்கம் அவருடைய நீண்ட நாள் கனவான கார் பந்தயத்திலும் அவர் நினைத்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனர் மோகன் ஜி அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை பற்றி பகிர்ந்து இருக்கிறார். இந்த விருதுக்கு அஜித் மிக மிக தகுதியானவர். ஆரம்பத்தில் மெக்கானிக்காக இருந்து எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருபவர் அஜித்.
அது மட்டுமல்ல அவருடைய படங்கள் மூலம் நல்ல நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். உதாரணமாக நேர்கொண்ட பார்வை படத்தில் பெண்களுக்கு ஆதரவாக சில விஷயங்களை கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக நோ மீன்ஸ் நோ என்ற அந்த ஒரு வாக்கியம் இன்று அனைவராலும் சொல்லப்பட்டு வருகிறது. அதோடு மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவையும் உலக அரங்கில் மூன்றாவது இடத்திற்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அஜித். அதனால் இந்த விருதுக்கு அவர் சரியான நபர் தான் என மோகன் ஜி கூறி இருக்கிறார்.