என்ன காரணமா இருக்கும்.. யாரும் எதிர்பார்க்காத வசூல் சாதனைகளை படைத்த டிராகன் படம்!

2 hours ago
ARTICLE AD BOX

என்ன காரணமா இருக்கும்.. யாரும் எதிர்பார்க்காத வசூல் சாதனைகளை படைத்த டிராகன் படம்!

Television
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டிராகன்" (Dragon) திரைப்படம் யாரும் எதிர்பாராத வசூல் சாதனையை படைத்து வருகிறது. வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் மூன்று நாட்களிலேயே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வேலை நாளான இன்றைய தினத்திலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும், சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. கல்லூரி மாணவனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியான குறுகிய நாட்களிலேயே இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைக்கும் என யாருமே கணிக்கவில்லை.

Dragon Cinema Tamil cinema

டிராகன் புக்கிங் சாதனை

சமீபத்திய தகவல்படி, "டிராகன்" திரைப்படம் புக் மை ஷோ App-ல் டிக்கெட் விற்பனையிலும் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 28 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதுமட்டுமின்றி, 2024 முதல் 2025 வரை வெளியான படங்களில் முதல் வார சனிக்கிழமை அன்று புக் மை ஷோவில் அதிக டிக்கெட் விற்பனையான படங்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், தனுஷின் 'ராயன்', அஜித்தின் 'விடாமுயற்சி', சூர்யாவின் 'கங்குவா' போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை "டிராகன்" பின்னுக்கு தள்ளியுள்ளது. கோட், வேட்டையன், அமரன் ஆகியவைதான் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

டிராகன் படத்தின் கதை

இந்த படத்தின் கதை பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் டிராகன், வாழ்க்கையில் குறுக்கு வழியில் முன்னேற நினைத்து செய்யும் தவறுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சுவாரஸ்யமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்கிறது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இளைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக படமாக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என நடிகர்கள் பட்டாளமே படத்திற்கு வலு சேர்த்துள்ளது. மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும், "டிராகன்" திரைப்படம் ரசிகர்களை கவரும் படமாக மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸிலும் யாரும் எதிர்பாராத வெற்றியை குவித்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சவால் விடும் படமாக உருவெடுத்துள்ளது.

சர்ப்ரைஸ் வெற்றிகள்

பல வருடங்கள் கழித்து ரிலீஸ் செய்யப்பட்ட விஷாலின், மதகஜராஜா பிரமாண்ட வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது. இப்போது என்னடா என்றால் பிரதீப் போன்ற அதிகம் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் படம் சக்கைபோடு போடுகிறது. மாரி செல்வராஜின் வாழை போன்ற சோகப்படங்கள் அதிகம் தமிழ் சினிமாவில் வரத் தொடங்கியதால் மக்கள் மாற்று படங்களுக்கு அதிக ஆதரவு தருகிறார்கள் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மையா? உங்கள் கருத்து என்ன? பதிவு செய்யுங்களேன்.

More From
Prev
Next
English summary
Dragon Box Office: "Dragon," starring Pradeep Ranganathan and directed by Ashwath Marimuthu, has become a surprise box office hit. The film grossed over ₹50 crore in its first three days and is projected to surpass ₹100 crore by the end of the week. "Dragon" has also achieved a record on BookMyShow, selling 288K tickets in a single day. Notably, in terms of first Saturday ticket sales on BookMyShow for 2024-2025, "Dragon" ranks fourth, surpassing films starring leading actors like Dhanush, Ajith, and Suriya. The movie's success is attributed to Pradeep Ranganathan's performance and an engaging storyline about a college student's life journey.
Read Entire Article