"என் மூஞ்சி நான் பண்றேன்..எந்த வெக்கமும் இல்ல.."பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன்

18 hours ago
ARTICLE AD BOX

சினிமாவுக்கு வரும் நடிகைகள் ஒரு சில படங்களுக்கும் பின் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துகொள்வது அதிகமாகி இருக்கிறது. பல முன்னணி நடிகைகள் தங்கள் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரியால் மாற்றியும் இருக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ச்சியான விமர்சனங்களும் வைக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது குறித்து மிக போல்டாக பேசி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தான் செய்து கொண்ட சர்ஜரி குறித்து அவர் முந்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்

அதை சொல்வதில் வெட்கம் இல்லை - பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் தனது மூக்கில் ரைனோபிளாஸ்டி என்கிற சிகிச்சை செய்திருக்கிறார். தனது மூக்கில் எலும்பில் சிறிய மாறுதல் இருந்ததாகவும் அதனால் தான் இந்த சர்ஜரி செய்துகொண்டதாக தெரிவித்தார். இதுவே அழகிற்காக தான் சிகிச்சை செய்துகொண்டாலும் அதைப் வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

"ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது அவருடைய தனிப்பட்ட விருப்பமே தவிர வெட்கப்படவோ , நியாயப்படுத்த வேண்டிய விஷயம் இல்லை. இது என்னுடைய வாழ்க்கை , என்னுடைய முகம், ஆமாம் நான் சர்ஜரி செய்திருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை" என அவர் கூறியுள்ளார்.

அழகை மையப்படுத்தி சமூகத்தில் பல அழுத்தங்கள் பெண்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் சர்ஜரியை தான் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் தற்போது ஆங்கிலத்தில் The Eye படத்தில் நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்று தற்போது இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசனின் நடிப்பு பலரால் பாராட்டபட்டு வருகிறது. இப்படத்தின் டிரைலரை நயன்தாரா பகிர்ந்து ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Read Entire Article