ARTICLE AD BOX
பிக் பாஸ் லாஸ்லியா நடித்த ‘ஜெண்டில்வுமன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்ஐசி ஏஜென்டாக பணிபுரியும் ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அவரிடம் பாலிசி போட்ட லாஸ்லியா, காவல்துறையில் புகார் அளிக்கிறார். இதேபோல், பல பெண்களும் அவரை காணவில்லை என புகார் அளிக்கிறார்கள். ஆனால், அவரது மனைவி இந்த புகாரை நம்ப மறுக்கிறார். "என் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல" என்று அவர் கூறும் நிலையில், பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன.
அதன் பிறகு, காணாமல் போன எல்ஐசி ஏஜென்ட் என்ன ஆனார் என்பதே இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.
ஜோஸ்வா சேதுராமன் இயக்கிய இந்த படத்தில் லிஜோமால் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, ராஜீவ் காந்தி, தரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காத்தவராயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ‘ஜெண்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.