ARTICLE AD BOX

தெலுங்கானா மாநிலம் ராம ரெட்டி மண்டலத்தில் உள்ள சிங்கராய பள்ளி கிராமத்தில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காமரெட்டி பகுதியில் தங்கி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஸ்ரீநிதி பள்ளிக்கு அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஸ்ரீ நிதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீநிதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.