ARTICLE AD BOX
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார்.
கோவைக்கு இருநாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு வருகைதந்த அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே, ’கோ பேக் அமித் ஷா’ வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கறுப்புக் கொடி காட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை இன்று காலை அமித் ஷா திறந்துவைத்தார். தொடர்ந்து, பாஜக நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித் ஷா கலந்துகொள்கிறார். நாளை காலை ஈஷாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வரும் அமித் ஷா, அங்கிருந்து விமானத்தில் தில்லி திரும்புகிறார்.