ARTICLE AD BOX
தமிழக நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை அதிமுக எல்எலஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எல்எல்ஏவுமான செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தார். இதையடுத்து இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் தங்களை சந்திக்காமல் தவிர்த்து வருகிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதை செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செங்கோட்டையன் பேசிய போது...
”என்னை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்தப் பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது.. வெற்றி முடிவானது. சில வேடிக்கை மனிதர்களைப் போல நான் விழுந்து விட மாட்டேன்” என்று தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டை காத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி:
தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசிய செங்கோட்டையன் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஒருமைப்பாட்டை காத்துள்ளார். அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா அவர்களும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் எம்ஜிஆர் அவர்களும் ஜெயலலிதா அவர்களும் சிறந்த தலைவர்கள் என்று குறிப்பிட்டு பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து விட்டார்
நான் அளந்துதான் பேச வேண்டி இருக்கிறது:
நான் தற்பொழுது இக்கட்டான சூழலில் இருக்கிறேன். சீமான் ஒரு கட்சியினுடைய தலைவர். அவர் மனதில் பட்டதை எதை வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால், நான் அளந்துதான் பேச வேண்டி இருக்கிறது. ஒரு வார்த்தை தவறிவிட்டால் தொலைக்காட்சிகளில் என்ன வரும் என்று தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.