எனது கலைமாமணி விருதை காணோம்… நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார்!

6 hours ago
ARTICLE AD BOX

தான் வாடகைக்கு இருந்த வீட்டின் பூட்டை உடைத்ததாக வீட்டின் உரிமையாளர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார்.

 

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர். அதை தொடர்ந்து இவர் சிவகாசி, சண்டக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். அதன் பின்னர் இவருக்கு கடந்த சில வருடங்களாகவே பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் கஞ்சா கருப்பு. இந்த நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு தனது கலைமாமணி விருதை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

kanja karupu

அதாவது சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் கஞ்சா கருப்புக்கும் அவருடைய ஹவுஸ் ஓனருக்கும் இடையில் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கஞ்சா கருப்பு, “ஆரம்பத்தில் எனக்கும் ஹவுஸ் ஓனருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. அவர் கேட்பதற்கு முன்பாகவே நான் வாடகை கொடுத்து விடுவேன். இருந்தாலும் சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று வந்து வீட்டை காலி செய்ய வேண்டும். எனக்கு வீடு வேண்டும் என்று சொன்னார் என் ஹவுஸ் ஓனர். அதன் பின்னர் நான் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். அவரும் சரி என்று சொன்னார். ஆனால் நான் சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது பூட்டிய வீட்டை உடைத்து வெள்ளை அடிச்சிருக்காங்க. அந்த சமயத்தில் என் வீட்டுக்குள் இருந்த கலைமாமணி விருது டாலரையும் காணவில்லை. இதனால்தான் போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டியதாயிருச்சு” என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article