எச்.ராஜா உண்மையான இந்துவா.. பாம்பாட்டி கோவில் சித்தரின் பரபரப்பு வீடியோ..

2 hours ago
ARTICLE AD BOX

திருப்பரங்குன்றம் மலை உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கிறோம் என்ற பெயரில்  கோவில் உள்ளே சென்று பாஜக கொடியுடன் கோஷம் போட்டு கோவில் புனிதத்தையே கெடுத்துள்ளார்கள். இப்படி போராட்டம் செய்தால் அவர்களுக்கு பதவி என்று ஏவியுள்ளாா்கள். அவர்களுக்கு எந்த உணர்வும் கிடையாது. என புலியூர் பாம்பாட்டி கோவில் சித்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். எச்.ராஜா உண்மையான இந்துவா.. பாம்பாட்டி கோவில் சித்தரின் பரபரப்பு வீடியோ..

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் –  நேற்றைய தினத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்கா விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். நேற்று பாஜக சங்பறிவார் உள்ளிட்ட அமைப்புகள் தர்காவிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினர். இதில் பாஜக பிரமுகர்கள் எச்.ராஜா உள்ளிட்டோர் கடுமையாக அரசை விமர்சனம் செய்து பேசியுள்ளார்கள்.

எதை வச்சு நீங்க வந்து போராட்டம் செய்கிறீர்கள் இங்கு இந்து, முஸ்லிம் ஒற்றுமையாக தான் உள்ளார்கள். இது உத்தரபிரதேசம் கிடையாது தமிழ்நாடு இங்கு உங்களின்  போராட்டம் வெற்றி பெறாது. நான் கேட்கிறேன் நான் ஒரு ஹிந்து.. பால்குடம் எடுப்பேன் காவடி எடுப்பேன் பாதயாத்திரை போவேன் பூக்குழி இறங்குவேன் நான் உண்மையான இந்து .நேற்று இங்கு வந்து போராடிய எச்.ராஜா எப்போது  பால்குடம் எடுத்துள்ளார்? பாதயாத்திரை சென்று உள்ளாரா? அவர் உண்மையான இந்துவா? அவர் நேற்று தமிழ்நாட்டை தாலிபான் நாடு என்று பேசுகிறார் எந்த தைரியத்தில் இவ்வாறு பேசுகிறார்.

இவர்கள் உண்மையான இந்துக்களா ! கடவுளை கண்காட்சி பொருளாகவும் கோவிலை பொருள்காட்சி பொருளாகவும் நினைத்து பாஜக இந்து முன்னணி இந்தப் போராட்டத்தை நடத்தி உள்ளது. பதவிக்கு ஆசைப்பட்டு இந்து யார்,  சாமி எது ,என்று தெரியாமலே பேசி வருகிறார்கள். இது தொடர்ந்தால் நாங்கள்  இந்து ,முஸ்லிம் ஒற்றுமைக்காக நீதிமன்றத்தை நாடக்கூடிய சூழல் வரும் என எச்.ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம்: புஸ்வானமான ஹெச்.ராஜா போராட்டம்!

Read Entire Article