"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!

2 days ago
ARTICLE AD BOX

"வலதுசாரித் தலைவர்களின் எழுச்சியால் தாராளவாதிகள் பெரிய அளவில் விரக்தியடைந்துள்ளனர். ட்ரம்ப், மெலோனி, மோடி ஆகியோரை அவர்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகிறார்கள். எங்கள் மீது எறிந்த சேற்றைப் பொருட்படுத்தாமல், குடிமக்கள் எங்களுக்கு வாக்களித்துக்கொண்டே இருக்கிறார்கள்" என இத்தாலி பிரதமர் மெலோனி விமர்சித்துள்ளார்.

"பதட்டத்தில் இடதுசாரிகள்"

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி, தாராளவாதிகள் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரை பாராட்டி பேசிய மெலோனி, "இடதுசாரிகள் பதட்டமாக உள்ளனர். ட்ரம்பின் வெற்றியுடன், அவர்களின் எரிச்சல் வெறித்தனமாக மாறியுள்ளது. பழமைவாதிகள் வெற்றி பெறுவதால் மட்டுமல்ல, பழமைவாதிகள் இப்போது உலகளவில் ஒன்றிணைந்து வருவதாலும் அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

"சேற்றை வாரி இறைக்கிறார்கள்"

90களில் பில் கிளிண்டனும் டோனி பிளேரும் உலகளாவிய இடதுசாரி தாராளவாத நெட்வொர்க்கை உருவாக்கியபோது, ​​அவர்கள் முதிர்ந்த அரசியல்வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். இன்று, ட்ரம்ப், மெலோனி, (ஜேவியர்) மிலேய், அல்லது (நரேந்திர) மோடி பேசும்போது, ​​அவர்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று பேசுகிறார்கள்.

இது இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாடு. ஆனால், நாம் அதற்குப் பழகிவிட்டோம். நல்ல செய்தி என்னவென்றால், மக்கள் இனி அவர்களின் பொய்களை நம்புவதில்லை. அவர்கள் நம் மீது வீசும் சேற்றைப் பொருட்படுத்தாமல், மக்கள் எங்களுக்கு வாக்களித்துக்கொண்டே இருக்கிறார்கள்" என்றார்.

இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் தலைவராக, கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத் தலைவர் பிரதமர் மெலோனி ஆவார்.

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வேறு எந்த தலைவரும் பங்கேற்கவில்லை. அதேபோல், கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் மெலோனி கலந்து கொள்வதாக அறிவித்த பிறகு, அதற்கு இத்தாலியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இத்தாலியின் மைய-இடது ஜனநாயகக் கட்சியின் தலைவரான எலி ஷ்லீன், பிரதமர் மெலோனியை இந்த நிகழ்விலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியவர்களில் ஒருவர். "இந்த நவ-பாசிசக் கூட்டத்திலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொள்ளும் கண்ணியம் அவருக்கு இருக்க வேண்டும்" என அவர் தெரிவித்திருந்தார்.

Read Entire Article