ஊட்டி, கொடைக்கானலில் ரோப் கார்.. மாமல்லபுரம் - மரக்காணம் டூர் வழித்தடம்.. அரசு அதிரடி திட்டம்

5 hours ago
ARTICLE AD BOX

ஊட்டி, கொடைக்கானலில் ரோப் கார்.. மாமல்லபுரம் - மரக்காணம் டூர் வழித்தடம்.. அரசு அதிரடி திட்டம்

Tour
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் - வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திட ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம் - மரக்காணம் வரையிலான கடலோரச் சுற்றுலா வழித்தடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறுகையில், "மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் - வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திட ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

tour Ooty Kodaikanal tamil nadu budget 2025 tamil nadu budget 2025

இந்த பணிகளை ஒருங்கிணைத்து முறையாக செயல்படுத்திட தனித்தனியே வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்க வேண்டிய நிலையில், முதல்கட்டமாக மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் நகரங்களுக்கு என அத்தகைய வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும். மேலும், அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென் தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்சசி குறைவாக உள்ள பகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். ஊட்டியின் மையப்பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்திடும் பொருட்டு மாமல்லபுரம் - மரக்காணம் வரையிலான கடலோரச் சுற்றுலா வழித்தடம், திருச்சி - தஞ்சாவூர் - நாகை சோழர்கால சுற்றுலா வழித்தடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்த்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அந்த பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டும் ரோப்கார் என்னும் உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

அலையாத்தி காடுகள் பாதுகாப்பு, நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில், கடல் வள அறக்கட்டளை ஒன்று ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும். சென்னை திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புதுப்பட்டு, கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் 'நீலக்கொடி' சான்று பெற்றிட ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநில போக்குவரத்து கழகங்களின் 700 டீசல் பஸ்களை, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மறுசீரமைப்பு செய்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியை கொண்டு ரூ.70 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். 2025-26-ம் ஆண்டு 500 கிலோ மீட்டர் நீளமுள்ள வனப் பகுதி சாலைகள் பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.250 கோடி மதிப்பீல் மேம்படுத்தப்படும்" இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
A new airport will be built in the Rameswaram area of Ramanathapuram district. The Ropeway project will be implemented in Ooty and Kodaikanal. It has been announced in the budget that the Mamallapuram-Marakkanam coastal tourist route will be implemented.
Read Entire Article