உஷார்.. ATM-ல் பணம் எடுத்து தருவதாக கூறி…. சமையல்காரரிடம் ரூ. 1.61 லட்சம் மோசடி…!!

4 days ago
ARTICLE AD BOX

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இதில் நடிப்பவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியில் வசிக்கும் ஷாஜி(42) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். உணவு தயாரிப்பதற்காக பொருள்கள் வாங்க அவருக்கு தயாரிப்பு நிறுவனம் பணம் அனுப்பி உள்ளது. இதை எடுக்க அவர் ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது இளைஞர் ஒருவர் ஷாஜிக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவி செய்துள்ளார்.

இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை எடுத்துவிட்டு திரும்பினார். சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.61 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்தது. பின்னர் ஏடிஎம் அட்டையை எடுத்துப் பார்க்கும்போது, அது போலியான அட்டை என்று தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் ஷாஜி புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அவரது ஏடிஎம் அட்டையின் பயன்பாடு ரத்து செய்யப்பட்டது.

Read Entire Article