உள்கட்சி நிலவரம்: கட்சி நிா்வாகிகளுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் ஆலோசனை

6 hours ago
ARTICLE AD BOX

உள்கட்சி நிலவரம் மற்றும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலோசனை மேற்கொண்டனா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளா் அஜய் மாக்கன், பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், பூபேஷ் பகேல், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், ரமேஷ் சென்னிதலா, ரண்தீப் சுா்ஜேவாலா, சச்சின் பைலட், அவினாஷ் பாண்டே, தீபா தாஸ்முன்ஷி, நசீா் ஹுசைன், குலாம் அகமது மிா் மற்றும் கட்சியின் மாநில பொறுப்பாளா்கள் சுக்ஜிந்தா் ரந்தாவா, ரஜனி பாட்டீல், ஹரீஷ் செளதரி, கே.ராஜு, கிருஷ்ணா அல்லவாரு, மீனாட்சி நடராஜன், மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கட்சியின் அமைப்பு ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு, குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏப்ரல் 8, 9 தேதிகளில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article