ARTICLE AD BOX
Rohit Sharma Creates World Record: சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரின் அரை இறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முதல் அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் 04) நடைபெற்றது. அதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்த இலக்கை துரத்திய இந்திய அணி 48.1 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலகில் எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா வரலாற்று சாதனை
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் அமைப்பு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடர், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை நடத்தி வருகிறது. இந்த 4 தொடர்களின் இறுதி போட்டிக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் இந்திய அணியை அழைத்து சென்று இருக்கிறார்.
இச்சாதனையை உலகில் வேறு எந்த அணியின் கேப்டனும் செய்தது இல்லை. மேலும், இந்த சாதனையை ரோகித் சர்மா இரண்டு ஆண்டு இடைவெளியில் செய்து உள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரை இந்திய அணியை வழிநடத்தி சென்றார் ரோகித் சர்மா. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் இந்திய அணியை அழைத்து சென்றார்.
ஆனால், இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி இறுதி போட்டிக்கு சென்றாலும் அதில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லவில்லை. அதன் பின் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி சென்றது. ஆனால் இம்முறை ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது.
கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பு
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. டி20 உலக கோப்பை போலவே இம்முறையும் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இடையே அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஸி குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20-ல் ரோகித் சர்மாவின் கேப்டன்ஸி இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இச்சாதனை அமைந்துள்ளது.
இந்திய அணியுடன் மோதப்போவது யார்?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி வரும் மார்ச் 09 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவுடன் எந்த அணி மோதப்போகிறது என்பதை இன்று நடைபெறும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் தெரிய வரும். இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியே இந்திய அணியுடன் மோதும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ