ARTICLE AD BOX
இந்த நவீன உலகத்தில் அனைத்துமே ஏஐ ஆகி வரும் நிலையில், உலகின் முதல் ஏஐ நாளிதழ் வெளியாகியுள்ளது.
சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.
நாளுக்கு நாள் புது புது ஏஐ செயலிகள் அறிமுகமாகி வருகின்றன. அதுவும் இப்போது ஆலோசனை வழங்குவது முதல் முழு கட்டுரையையும் ஏஐயே வழங்கிவிடுகிறது.
இது இப்போதைக்கு வசதியாக இருந்தாலும் போக போக மனிதர்களின் யோசிக்கும் திறனையே அழித்துவிடும். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.
அந்தவகையில் தற்போது உலகின் முதல் ஏஐ நாளிதழ் இத்தாலியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இல் போக்லியோ, நாளிதழ் நிறுவனம் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது .
இதில் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்திகளை மட்டுமே சொல்கிறார்கள். மற்ற அனைத்தையுமே அதாவது, தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மட்டுமே உருவாக்குகிறது.
இப்படித்தான் ஏஐ நாளிதழ் உருவாகிறது என்று நாளிதழின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி வெற்றியில் முடிந்தால், அதாவது மக்களுக்குப் பிடித்தமாக மாறி, நிறைய விற்பனையானால், லாபம் அதிகரிக்கும். இதனால், விரைவில் உலகம் முழுவதுமுள்ள செய்தி நிறுவனங்கள் இதையே பின்பற்றுவார்கள்.
இன்னும் சில காலத்தில், செய்தியை சேகரிக்கும் வகையிலும் ஏஐ தொழில்நுட்பம் அப்டேட் ஆனால், மனிதர்களுக்கு வேலையே இருக்காது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
பின் அவர்களுக்கு சம்பளமும் கொடுக்க வேண்டாம். அதன்பின் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம். இப்படி செய்தால் சமநிலை இருக்காது. இப்படியே அனைத்து துறைகளிலும் ஏஐ வந்துவிட்டால், சமநிலையின்மை காரணமாக அரசும் தடுமாற வாய்ப்புள்ளது. மேலும் மக்களையும் பாதிக்கும்.
ஒரு ஏஐ செய்தித்தாளுக்கு பின்னர் இவ்வளவு பெரிய விளைவு இருக்கிறதா? என்று எண்ணி வியக்கத்தான் செய்ய வேண்டும். ஆனால், நாளுக்கு நாள் வளர்ச்சியை சந்தித்து வரும் ஏஐ, பின்னாட்களில் மனிதனுக்கே ஆபத்தாக முடியலாம்.