ARTICLE AD BOX
கலங்கரை விளக்கங்கள் ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழைவு வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்படுகின்றன.
கலங்கரை விளக்கங்கள் பொதுவாக துறைமுகம் , விரிகுடா நுழைவாயில்களில் அமைக்கப்படுகின்றன. அவை கப்பல்களுக்கு முக்கியமான அடையாளங்களாகச் செயல்படுகின்றன. உலகின் பிரபலமான 5 கலங்கரை விளக்கங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. கனடா - பெக்கிஸ் பாயிண்ட் கலங்கரை விளக்கம்:
நோவா ஸ்கோடியாவில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் கனடாவின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். இது பிரமிக்க வைக்கும் கடலோர காட்சிகளையும் கடல் சார் வரலாற்றைப் பற்றிய ஒரு பார்வையையும் வழங்குகிறது. வியத்தகு கடற்கரை பின்னணியுடன் புகைப்படம் எடுப்பதற்கு பிரபலமான இடம். பாறைகள் நிறைந்த கடற்கரை ஓரமாக நடந்து சென்று மோதும் அலைகளின் சத்தத்தை ரசிக்கலாம். கலங்கரை விளக்கம் தங்க ஒளியில் மூழ்கும்போது சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.
2. கேப் பைரன் கலங்கரை விளக்கம் - ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியில் கிழக்கு முனையில் அமைந்துள்ள கேப் பைரன் கலங்கரை விளக்கம் கண்கவர் கடல் காட்சிகளையும் இடம் பெயரும் திமிலங்களை காணும் வாய்ப்பையும் வழங்குகிறது. பசிபிக் பெருங்கடல் மற்றும் சுற்றியுள்ள கடற்கரையில் பரந்த காட்சிகளை வழங்குகிறது. கடலின் மேல் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு பிரபலமான இடம் இது .1901 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் அழகிய கலங்கரை விளக்கங்களில் ஒன்றாகும். டால்பின்கள், ஆமைகள், திமிலங்களை இங்கு காணலாம்.
3. மைனே போர்ட் லேண்ட் ஹெட் லைட் கலங்கரை விளக்கம் - அமெரிக்கா:
நியு இங்கிலாந்தின், புகைப்படம் எடுக்க மிகவும் பிரபலமானது போர்ட் லேண்ட் ஹெட் லைட் கலங்கரை விளக்கம் . இது மிகப் பழமையான கலங்கரை விளக்கம் . 1791-ல் முதன் முதலில் கட்டப்பட்டது. வரலாற்று கலைப் பொருட்களைக் காண இதில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம்.
4. லிண்டெஸ்னெஸ் கலங்கரை விளக்கம் - நோர்வே:
நோர்வேயின் தெற்கு முனையில் அமைந்துள்ள லிண்டெஸ்னெஸ் கலங்கரை விளக்கம் கரடு முரடான நோர்டிக் நிலப்பரப்புகளை ஆராய ஏற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க அழகிய இடமாகும். வட கடலின் வியத்தகு காட்சியகங்கள், பாறைகள் நிறைந்த தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இது 1656-ம் ஆண்டுக்கு முந்தையதாகும். பாறைகள் நிறைந்த கடற்கரை ஓரத்தில் வளைந்து செல்லும் அருகிலுள்ள மலை ஏற்ற பாதைகளை காணலாம். அருங்காட்சியத்தில் கடல் சார் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
5. எகோருனா ஹெர்குலஸ் கோபுரம் - ஸ்பெயின்:
இது உலகின் மிகப் பழமையான செயல்பாட்டு கலங்கரை விளக்கமாகும். இது வரலாறு மற்றும் கடலோர அழகின் கலவையை வழங்குகிறது. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்களால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளாக செயல்படுகிறது. நம்ப முடியாத காட்சிகளை உச்சியில் 234 படிகளில் ஏறி காணலாம். அருகில் சிற்ப பூங்காவையும், கடலோரப் பாதைகளில் நடந்து சென்று இயற்கை காட்சிகளையும் காணலாம். வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்.