ARTICLE AD BOX
மனித இனம் தான் புத்திசாலி உயிரினம். இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒரு விதத்தில் தனித்துவமானது என்பதால் மனிதர்கள் செய்ய முடியாத சில காரியங்களைக் கூட விலங்குகள் செய்துவிடும். அந்த வகையில் உலகின் மிகவும் புத்திசாலியான 10 விலங்குகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. ஒராங்குட்டான்
ஒராங்குட்டான்கள் மனிதர்கள் உபயோகிக்கும் கருவிகளை திறம்பட பயன்படுத்தும் அறிவாற்றலையும், சைகை மொழிகளை கற்றுக்கொள்ளும் திறனையும் பெற்றிருப்பதால் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. மேலும், சிக்கலான சமூக கட்டமைப்புகள் மற்றும் உணர்ச்சி ஆழத்தை நிரூபிக்கும் சில தனித்துவமான சடங்குகளும் ஓராங்குட்டான்களிடம் உள்ளது.
2. பாட்டில்நோஸ் டால்பின்
பாட்டில்நோஸ் டால்பின் கண்ணாடியில் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதாலும், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் குறிப்பிட்ட அழைப்புகளைக் கொண்ட ஒரு சிக்கலான மொழி அமைப்பைப் பயன்படுத்த முடியும் என்பதாலும் மற்ற டால்ஃபின்களை விட புத்திசாலி விலங்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
3. சிம்பன்சி
சிம்பன்சிகளின் மரபணுக்கள் மனிதர்களின் மரபணுக்களுடன் 98% ஒத்திருப்பதாக அறியப்படுகிறது. அவை கருவிகளை சிறப்பாக பயன்படுத்துவதாகவும், சிக்கலான விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்வதாகவும் அறியப்படுவதோடு, மனித தலையீடு இல்லாமல் தங்கள் குழந்தைகளுக்கு சைகை மொழியைக் கற்பிப்பதாக அறியப்படுகிறது.
4. யானை
அதீத நினைவாற்றல் மற்றும் விதிவிலக்கான உணர்ச்சி நுண்ணறிவுக்குப் பெயர் பெற்ற யானைகள், தங்கள் கூட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களுக்காக இறுதி சடங்குகளைச் செய்வதோடு, தங்கள் கூட்டத்தினரை பாதுகாப்பதன் மூலம் நட்பைக் கடைப்பிடிப்பதால் புத்திசாலி என அழைக்கப்படுகிறது.
5. ஆப்பிரிக்க க்ரே கிளி
ஐந்து வயது குழந்தையின் திறன்களான, நூற்றுக்கணக்கான வார்த்தைகளை மனப்பாடம் செய்து, வடிவங்கள் மற்றும் வண்ணங்களை எளிதில் அடையாளம் காணும் திறன்களை ஆப்பிரிக்க கிரே கிளிகளும் பெற்றிருப்பதால் புத்திசாலி விலங்காக அறியப்படுகிறது.
6. ஆக்டோபஸ்
நீண்ட கால நினைவாற்றலையும், தங்களின் அனுபவத்திலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வது மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களிடையே தப்பிப்பதற்கும், வேட்டையாடுவதற்குமான தனித் திறன்களை ஆக்டோபஸ் பெற்றிருப்பதால் புத்திசாலியாக அறியப்படுகிறது.
7. பன்றி
மிகச்சிறிய வயதிலேயே பிரதிபலிப்பு பற்றிய புரிதல் மற்றும் பலவிதமான குரல்களை உள்ளடக்கிய அவற்றின் வளமான தொடர்பு அமைப்பு காரணமாக, பன்றிகள் புத்திசாலித்தனத்தால் மிகவும் உயர்ந்தவையாக மதிப்பிடப்படுகின்றன.
8. காகம்
காகங்கள், முகங்களை புரிந்து கொள்ளும் சிறந்த நினைவாற்றலை கொண்டுள்ளதோடு, குறிப்பிடத்தக்க சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களையும் கொண்டுள்ளன. மேலும் அவற்றுக்கு கைகள் இல்லாவிட்டாலும் கருவிகளைத் திறம்படப் பயன்படுத்தக் கூடிய திறன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அவற்றின் நடத்தைகளை மாற்றியமைக்கும் தகவமைப்பை பெற்றிருப்பதால் காகங்கள் புத்திசாலி விலங்குகளாக அறியப்படுகின்றன.
9. புறா
தங்களுடைய இருப்பிடங்களையும், தனி நபர்களையும் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக் கொள்வதில் புறாவுக்கு இணை இல்லை. மேலும், சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் புறாக்கள் கண்ணாடியில் தங்களை அடையாளம் கண்டு சுய விழிப்புணர்வை வெளிப்படுத்துவதால் புத்திசாலி விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
10. எலி
அனைத்து அறிவியல் பரிசோதனைகளுக்கும் பயன்படும் எலிகள், மனிதனைப் போன்ற அறிவாற்றலைக் கொண்டுள்ளன. மேலும் அவை ஆராய்ச்சிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சமூக நடத்தைகளைக் கொண்டுள்ளதால் புத்திசாலியாக கருதப்படுகிறது.