விமான நிலைய சேவைகளையும், பயணிகளின் திருப்தியையும் பொறுத்து விமான நிலையத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது! முன்னணி விமான நிலைய பயணிகள் திருப்தி திட்டமான 2024 விமான நிலைய சேவை தர (ASQ) விருதுகளுக்காக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஐந்து இந்திய விமான நிலையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை விமான நிலையம் இடம் பெற்றுள்ளதா? என்று பார்ப்போம்!

ஆண்டுதோறும் கணக்கிடப்படும் விமான நிலைய தரம்
விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) ஆண்டுதோறும் விமான நிலைய சேவை தர (ASQ) விருதுகளை நடத்துகிறது, இது விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைகளில் நடத்தப்படும் ஆய்வுகள் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மதிப்பிடுகிறது. இந்தத் திட்டம் 110 நாடுகளில் 400 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை மதிப்பிடுகிறது. இந்த முயற்சிக்காக பல இந்திய விமான நிலையங்களும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
இந்தியா சார்பில் ஏழு விமான நிலையங்கள்
2024 ஆம் ஆண்டுக்கான ASQ விருதுகளின் வெற்றியாளர்கள் மார்ச் 11, 2025 அன்று அறிவிக்கப்பட்டனர். ஆசிய-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் உள்ள விமான நிலையங்கள் பயணிகளின் அனுபவங்களுக்கு புதிய தரநிலைகளை அமைத்து வருவதாகவும், இந்தப் பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு 68 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்தியாவும் சிறந்து விளங்கியுள்ளது, அதன் ஏழு விமான நிலையங்கள் அவற்றின் சிறந்த செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சிறந்து விளங்கிய இந்திய விமான நிலையங்கள்
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவை ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டதற்காக 'ஆசிய-பசிபிக்கின் சிறந்த விமான நிலையங்கள்' என 2024 ஆம் ஆண்டுக்கான ASQ விருதுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 'உலகளவில் வருகைக்கான சிறந்த விமான நிலையம்' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
விருது வென்ற இந்திய விமான நிலையங்கள்
1. கண்ணூர் சர்வதேச விமான நிலையம் ஆசிய-பசிபிக் பகுதியில் சிறந்த விமான நிலையமாகும், ஆண்டுக்கு 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் கையாள்கிறது.
2. சண்டிகர் விமான நிலையம் ஆசிய-பசிபிக் பகுதியில் சிறந்த விமான நிலையமாகும், ஆண்டுக்கு 2 முதல் 5 மில்லியன் பயணிகள் சண்டிகர் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
3. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் ஆசிய-பசிபிக் பகுதியில் சிறந்த விமான நிலையமாகும், ஆண்டுக்கு 15 முதல் 25 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
4. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் ஆசிய-பசிபிக் பகுதியில் சிறந்த விமான நிலையமாகும், ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மும்பை சத்ரபதி விமான நிலையத்தை கையாள்கின்றனர்.
5. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆசிய-பசிபிக் பகுதியில் சிறந்த விமான நிலையமாகும், ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
6. உலகளவில் வருகைக்கு சிறந்த விமான நிலையமாக பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது
7. உலகளவில் வருகைக்கு சிறந்த விமான நிலையமாக மங்களூரு சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet