ARTICLE AD BOX

இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசம் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முருகனின் அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை,பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் கோவில்களிலும் மருதமலை உள்ளிட்ட ஏனைய முருகன் கோவில்களிலும் தைப்பூசம் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோவில்களிலிம் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள முருகன் கோவில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப்பூசம் திருநாளில் பத்திரப்பதிவு அலுவலகம காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடிவடையும் நேரம் வரையிலும் திறந்திருக்கும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பத்திரப்பதிவு செய்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான சிறப்பு ஏற்பாடாக இது உள்ளது.