உலகப் பணக்காரர்களே... ஓடி வாங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின் புதிய விசா அறிவிப்பு!!

5 hours ago
ARTICLE AD BOX

5 மில்லியன் டாலர்கள் கட்டணம் செலுத்தினால் அமெரிக்காவுக்கு வர கோல்டு கார்டு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதாவது சுமார் 44 கோடி ரூபாய் கொடுத்தால் இந்தியர்கள் அமெரிக்காவின் கோல்டு கார்டு பெற்று அமெரிக்காவுக்குள் சென்று விடலாம். அப்படியே ஐந்தாண்டுகள் அங்கே இருந்து அமெரிக்க குடிமகன்/மகள் ஆகிவிடலாம் என்பது தான் ட்ரம்ப் அறிவிப்பின் சுருக்கமாகும்.

தற்போது நடைமுறையில் இபி 5 பிரிவு விசா திட்டத்தில் அமெரிக்காவில் சுமார் 8 கோடி ரூபாய் அமெரிக்காவில் முதலீடு செய்து தொழில் தொடங்கினால் க்ரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விசாக்கள் மட்டுமே வழங்கப்படும். இந்த விசா பிரிவு 1990ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தால் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.

அதிபர் ட்ரம்ப் பின் புதிய அறிவிப்பு இபி 5 பிரிவு விசாவை நீக்கிவிட்டு நேரடியாக 44 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி கோல்டு கார்டு பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். சட்ட வல்லுனர்கள் அதிபர் ட்ரம்ப் க்கு இத்தகைய ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை. அமெரிக்க பாராளுமன்றம் மட்டுமே புதிய விசா பிரிவை உருவாக்க முடியும் என்கிறார்கள். ஆனால் அதிபர் ட்ரம்ப் இன்னும் 2 வாரத்தில் கோல்டு கார்டு நடைமுறைக்கு வரும். ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று வாங்கிக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

வழக்கம் போல் அதிபர் ட்ரம்ப் பின் இந்த கோல்டு கார்டு விசாவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தடையைப் பெறுமா? அல்லது நடைமுறைக்கு வருமா என்பது வரும் வாரங்களில் தெரிந்து விடும். நடைமுறைக்கு வந்தால் இந்திப் பணக்காரர்களின் அமெரிக்க குடிமகனாகும் கனவுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்றே சொல்லலாம்.

Read Entire Article