ARTICLE AD BOX
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார் ட்ரம்ப்.
கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "அமெரிக்கா மெக்சிகோ கனடா ஒப்பந்தம் மூலம் (USMCA) அடுத்த வாரத்தில் இருந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து மிகப்பெரிய பயன்களைப் பெற்றுக்கொண்டனர். இதனால், அமெரிக்காவிற்குத்தான் அதிக நிதி நெருக்கடி உருவாகியுள்ளது. அதனால், இதில் இறக்குமதி வரியை அதிகரிக்கப்போகிறேன்.

நான் இதில் சில ஒப்பந்தங்களை பார்த்தேன்... இரவு படித்தேன். அதை வைத்துச் சொல்கிறேன்... 'யாராவது இந்த மாதிரியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்களா?' இனி வரி விதிப்பு அதிகமாக்கப்படும். நமக்கு என்ன தருகிறார்களோ, அதை நாமும் அவர்களுக்கு திருப்பி தருவோம்" என்று பேசியிருந்தார்.
அவர் அவருக்கு என்ன சரி என தோன்றியதோ அதை பேசியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா... அவர் பேசியதெல்லாம் சரி தான். ஆனால், அவர், 'யார் இந்த மாதிரியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்?' என்று கூறியதில்தான் சிக்கல் எழுந்துள்ளது. இவர் முதன்முறையாக அதிபராக இருந்தபோது, 2020-ம் ஆண்டு அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம்தான் அமெரிக்கா மெக்சிகோ கனடா ஒப்பந்தம் ஆகும்.
இந்தக் கருத்தை ட்ரம்ப் தெரிந்து சொன்னாரா... அல்லது தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. ட்ரம்ப்பின் இந்தக் கருத்து தற்போது அமெரிக்காவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
US: ``Gold Card Visa வாங்கி, இந்தியர்களை வேலைக்கு எடுங்க...'' - என்ன சொல்கிறார் ட்ரம்ப்?