உற்பத்தி துறையைத் தேர்வு செய்த வருங்கால பில்லியனர்கள்!

3 hours ago
ARTICLE AD BOX

உலகளவில் தற்போதைய மற்றும் வருங்கால பில்லியனர்கள் குறித்து, 2700 பில்லியனர்கள் தெரிவித்த தகவல்கள் சமீபத்தில் ஆய்வில் வெளியிட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு பில்லியன் டாலர் கொண்டிருக்கும் பணக்காரர்கள் குறித்து 2700 பில்லியனர்களிடம் இருந்து தரவுகள் சேமிக்கப்பட்டு, ஆய்வின் தரவறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு பில்லியன் டாலர் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறையில் இருப்பவர்களே. நிதித் துறையுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்பத் துறையே அதிகளவில் பில்லியனர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் 60 வயதுக்கிடைப்பட்டவர்களே பெரும்பாலும் உள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் பில்லியனர்களின் சராசரி வயது 63.3 என்று இருந்த நிலையில், 2024-ல் 65.7 என்று மாறியுள்ளது. பில்லியனர்களில் 87 சதவிகிதத்தினர் ஆண்கள் (அவர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 12.4 டிரில்லியன்), 13 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்களாகவும் (பெண் பில்லியனர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 1.78 நிகர மதிப்பு) உள்ளனர்.

இதையும் படிக்க: மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

உலகளவில் ஒட்டுமொத்த பில்லியனர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பில் 40 சதவிகிதமும் அமெரிக்காவில்தான் உள்ளது.

2023 முதல் 2024 வரையில் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 26 பேர் பில்லியனர் மதிப்பைப் பெற்றனர். இந்தியாவில் தற்போது 191 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

கடந்தாண்டின் புதிய பில்லியனர்களில் 82 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் ஆண்களே. அதுமட்டுமின்றி, கடந்தாண்டு பில்லியனர்களில் 30 வயதுக்குட்பட்டோரில் 47 சதவிகிதத்தினர் பெண்களே.

தொழில்நுட்பத் துறையில் இருந்து அதிகளவில் பில்லியனர்கள் வந்தாலும், இனிவரும் காலங்களில் உற்பத்தித் துறையில் இருந்து புதிய பில்லியனர்கள் உருவாக வாய்ப்புள்ளது. இனிவரும் புதிய பில்லியனர்கள் இளையவர்களாக இருப்பதுடன், பெண் பில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

Read Entire Article