ARTICLE AD BOX
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கம்பெனியில் அன்பு மற்றும் மகேஷ் இருவருக்கும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது.
ஆனால் அதன் பின்னர் மகேஷ் உண்மையான சூழல் என்ன என்பதை உணர்ந்து கொண்டது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
அதாவது ஆனந்திக்கு சம்பள உயர்வு கொடுக்காதது பகையை காரணமாக என்று உணர்ந்து கொண்டு அரவிந்திடம் இது பற்றி மகேஷ் கேட்கிறான்.
கைதாகும் அன்பு
மேலும் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மற்றும் மகேஷ் இருவருமே பீச்சில் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சண்டையிட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்திருப்பது போல் காட்டப்படுகிறது.
அன்பு மயக்கத்தில் இருக்கும் நேரத்தில் அரவிந்த் ஆட்கள் மகேஷை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். மேலும் அந்த பழி அன்பு மீது விழும் என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிந்து விட்டது.
அதே நேரத்தில் அன்பு மகேஷை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்றிருப்பது ஆனந்திக்கு தெரிய வருகிறது. இதனால் ஆனந்தியும் கடற்கரைக்கு போகிறாள்.
மகேஷை அந்த ஆட்களிடம் இருந்து காப்பாற்றி அன்பு மீது வர இருக்கும் கொலை குற்றத்திலிருந்து அவனைக் காப்பாற்றுகிறாளா, அல்லது அன்பு கைதாகி பின்னர் மகேஷ் கண் திறந்து நடந்ததை சொல்வது போல் காட்டப்படும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.