ARTICLE AD BOX

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடந்த மாதம் 'விடாமுயற்சி' படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தின் அஜித் நடித்து முடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதில் மூன்று வெவ்வேறான தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில், அஜித் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவார் என புதிய தகவல் தெரிய வந்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான பிறகு அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.