ARTICLE AD BOX
ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட், முண்லடனா பகுதியில் வசித்து வருபவர் சுரேந்தர் ஜவஹர். இவர் பாஜக மண்டல தலைவராக இருந்து வருகிறார்.
இவருக்கும் - உள்ளூரில் வசித்து வரும் ஒரு நபருக்கும் இடையே, நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், லேசான கைகலப்பு எழுவது வாடிக்கையாக இருக்கிறது.
இதனிடையே, சம்பவத்தன்று சுரேந்தர் ஜவஹர் மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சுரேந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பயணிகளை ஏற்றுவதில் தகராறு.. ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை.. பேருந்து ஊழியர்கள் வெறிச்செயல்.!
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோனு என அடையாளம் காணப்பட்டுள்ள நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னை: படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்.. வாழ்க்கையில் பெயிலியர்.. தந்தையை கொடூரமாக கொன்ற மகன்.. அதிரவைக்கும் சம்பவம்.!