ARTICLE AD BOX
சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியின் படி கீழ்க்கண்ட மூன்று பொருட்களை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும் என்று அறியப்படுகிறது.
சென்டெட் மெழுகுவர்த்திகள்:
பெரும்பாலான வீடுகளில் சென்ட் வாசனை உள்ள மெழுகுவர்த்திகளை உபயோகிக்கிறோம். ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவரின் கூற்றுபடி, இத்தகைய வாசனை மெழுகுவர்த்திகளில் Phthalates என்ற ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தால் ஹார்மோன்களின் சமநிலையின்மை ஏற்படுவதாக அறியப்படுகிறது. சோயா மற்றும் பீஸ்வாக்ஸ் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்ததாக அறியப்படுகிறது.
ப்ளாஸ்டிக் கட்டிங் ஃபோர்டு:
உங்கள் வீடுகளில் காய்கறிகளை அறியும் போது ப்ளாஸ்டிக் போர்டுகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான விஷயமாகும். தொடர்ந்து இதை உபயோகித்தால் அதிலுள்ள மைக்ரோ ப்ளாஸ்டிக்கால் உணவுப் பொருட்கள் வீணாகும். இதற்குப் பதிலாக மர கட்டிங் ஃபோர்டு அல்லது கண்ணாடி போர்டுகள் பயன்படுத்தலாம். ஆனால் இவைகளை சுத்தம் செய்வது கஷ்டமானதாக இருந்தாலும், ஆரோக்கியம் விஷயத்தில் பாதுகாப்பாக கருதப்படுகிறது.
கீறல் விழுந்த நான்ஸ்டிக் பான்கள்:
கீறல் விழுந்த நான்ஸ்டிக் பான் உபயோகிக்கும் போது அதிலிருந்து ஆபத்து விளைவிக்கக் கூடிய Poly-tetra-fluoro-ethylene (PTFE) என்ற ரசாயனத்தால் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்று அறியப்பட்டிருக்கிறது. நான்ஸ்டிக்கிற்குப் பதிலாக எவர்சில்வர் அல்லது இரும்பு வாணலிகளை பயன்படுத்துவது சிறந்தது.