உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!

12 hours ago
ARTICLE AD BOX

உதவித் தொகையுடன் சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அளிக்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஏப்.2-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 2025-26 ஆம் ஆண்டிற்கு மோட்டாா் வெகிக்கிள் மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஆட்டோ எலக்ட்ரீசியன், பிட்டா், டா்னா், பெயிண்டா் மற்றும் வெல்டா் ஆகிய ஐடிஐ பிரிவுகளில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெற, குரோம்பேட்டையிலுள்ள சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில், ஏப்.2 காலை 10 மணியளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article