என்னதான் முயன்றாலும் உங்க ஊழல் கறையை மறைக்க முடியாது - திமுகவை சாடிய வானதி

14 hours ago
ARTICLE AD BOX

என்னதான் முயன்றாலும் உங்க ஊழல் கறையை மறைக்க முடியாது - திமுகவை சாடிய வானதி

Coimbatore
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

கோவை: டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அறவழியில் போராட முயன்ற பா.ஜ.க. தலைவர்களையும், தொண்டர்களையும் வீட்டுச் சிறையில் வைப்பதும், அடிப்படையின்றி அவர்களைக் கைது செய்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அராஜகத்தின் உச்சம், ஆணவத்தின் மிச்சம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகளால் அறத்தை வீழ்த்தி விடலாம் என்று தப்புக்கணக்கு போடும் மு.க. ஸ்டாலினுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் மக்கள் நலனை முன்னெடுக்கும் தேசியவாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் அல்ல என்றும் வானதி சீனிவாசம் கூறியுள்ளார்.

Vanathi Srinivasan Tasmac

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உங்களின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அறவழியில் போராட முயன்ற பா.ஜ.க தலைவர்களையும், தொண்டர்களையும் வீட்டுச் சிறையில் வைப்பதும், அடிப்படையின்றி அவர்களைக் கைது செய்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அராஜகத்தின் உச்சம், ஆணவத்தின் மிச்சம்!

நமது நாட்டு பிரதமரின் உருவப்படங்களை எரிக்கும் பயங்கரவாதிகளையும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயலும் குற்றவாளிகளையும் உடனே கைது செய்யாமல், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் முழு அனுமதி கொடுத்துவிட்டு, அறத்தின் வழியே அமைதியாகப் போராட நினைக்கும் பா.ஜ.க.வினரை உடனுக்குடன் கைது செய்து ஒடுக்குவது பாசிசமேயன்றி வேறில்லை.

இவ்வாறு, அடக்குமுறைகளால் அறத்தை வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போடும் மு.க. ஸ்டாலினுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் மக்கள் நலனை முன்னெடுக்கும் தேசியவாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் அல்ல.

எனவே, உங்கள் கைதுகளும், கைவிலங்குகளும் எங்கள் மனஉறுதியின் நிழலைக் கூட அசைத்துவிட முடியாது, இந்தக் களத்தில் நாங்கள் உள்ளவரை நீங்கள் என்னதான் முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
The placing of BJP leaders and workers under house arrest and their baseless arrests, who tried to protest the TASMAC corruption, is strongly condemned. Vanathi Srinivasan has said that this is the height of anarchy and the remnants of arrogance.
Read Entire Article